Tamil Nadu Govt Approved For 6 Textile Parks Plan : 6 ஜவுளி பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணை வழங்கப்பட்டது
Tamil Nadu Govt Approved For 6 Textile Parks Plan :
22/01/2024 அன்று தலைமைச் செயலகத்தில் 6 ஜவுளி பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணையும் மற்றும் 17 தொழில் நிறுவனங்களுக்கு மானியமும் முதல்வர் ஸ்டாலின் (Tamil Nadu Govt Approved For 6 Textile Parks Plan) வழங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணைகள் வழங்கப்பட்டது. மேலும் ஜவுளி தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 17 தொழில் நிறுவனங்களுக்கு 10% கூடுதல் மூலதன முதலீடு மானியத் தொகையாக 9.25 கோடி ரூபாய்க்கான காசோலைகள் ஆனது வழங்கப்பட்டது.
தமிழக அரசு செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு நூல் உற்பத்தி மற்றும் பின்னலாடைத் தொழிலில் முதல் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டினை, இந்தியாவின் சிறந்த வணிகத் தளமாக நிலைநிறுத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கம் உள்ளது. இது தொடர்பாக அதிகமான தொழில் முதலீட்டினை ஈர்த்து அதன்மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை அடைந்திடவும், சிறிய அளவிலான தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதன் மூலம் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டம் தொடங்கப்பட்ட போதிலும் திட்ட வழிமுறைகளில் இருந்த இடர்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டில் யாரும் ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரவில்லை. 2022 ஆம் ஆண்டில் இந்த இடர்பாடுகளை களையும் வகையில் சிறு மற்றும் நடுத்தர ஜவுளி தொழில்முனைவோர்கள் ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் வழிமுறைகளை எளிதாக்கும் பொருட்டு, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்த இவ்வரசு ஆணையிட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசு தற்போது சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ், 2 ஏக்கர் நிலத்தில் குறைந்தபட்சம் 3 உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும் என்றும், இதற்கென உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்கள் அமைக்க தகுதியான திட்ட மதிப்பீட்டில் 50% (அதிகபட்சமாக ரூ.2.50 கோடி வரை) மானியமாக வழங்கிடவும் ஆணையிட்டுள்ளது. இந்த தமிழ்நாடு அரசு ஆணையத்தின் காரணமாக, ஜவுளித் தொழில்முனைவோர் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களை அமைப்பதற்கு அதிக அளவில் ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர். சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் திட்டத்தின் கீழ்,
- திருவள்ளூர்-திருப்பதி மினி டெக்ஸ்டைல் பார்க்
- தர்மபுரி-பாரத் மினிடெக்ஸ்டைல் பார்க்
- கரூர்-VMD மினிடெக்ஸ்டைல் பார்க்
- திருப்பூர்-கார்த்திகேயா வீவிங் பார்க்
- கரூர்- ஸ்ரீ பிரனவ் மினிடெக்ஸ்டைல் பார்க்
- கரூர்-நாச்சி மினிடெக்ஸ்டைல் பார்க்
ஆகிய 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திட்ட செயலாக்கத்திற்கான மொத்த மானியத் தொகை ரூபாய் 13.75 கோடியில், முதற்கட்டமாக ரூபாய் 5 கோடி ஒப்பளிப்பு செய்து அதற்கான திட்ட ஒப்புதல் அரசாணைகளை மினி டெக்ஸ்டைல் பார்க் நிர்வாகிகளிடம் வழங்கினார். இதன்மூலம், சிறு மற்றும் நடுத்தர ஜவுளி தொழில்முனைவோர்கள் பயன்பெறுவார்கள் மற்றும் சுமார் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஆனது கிடைக்கும். ஒரு பூங்காவில் ஆண்டுக்கு 24 லட்சம் மீட்டர் உற்பத்தி வீதம் என்ற கணக்கில் 6 பூங்காக்களில் 144 லட்சம் மீட்டர் அளவிற்கு துணி வகைகள் இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டம் ஆனது,
- தமிழ்நாட்டில் விசைத்தறி, கைத்தறி, நூற்பு, பதனிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் நவீன, ஒருங்கிணைந்த மற்றும் உலகத் தரம் வாய்ந்த ஜவுளித் துறையை உருவாக்கவும்.
- உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்காகவும் உற்பத்தி செலவைக் குறைத்து, உயர்தர ஜவுளி ஆடைகள் உற்பத்தி செய்யவும்.
- புதுமை, பன்முகத்தன்மை, மதிப்பு கூட்டல் ஆகியவற்றில் அதிக முக்கியத்துவம் அளித்து ஜவுளித்துறையை ஊக்குவிக்கவும்.
ஜவுளித் தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் கீழ் தங்களது நிறுவனங்களில் செய்துள்ள முதலீட்டில் 10% கூடுதல் மூலதன முதலீடு மானியத் தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான முதலீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 17 ஜவுளி நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத் தொகையாக ரூபாய் 9.25 கோடி வழங்கிட திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 22/01/2024 அன்று 5 நிறுவனங்களுக்கு மானியத் தொகையாக ரூபாய் 5.33 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
Latest Slideshows
-
Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
-
Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
-
Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
-
RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
-
Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
-
Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
-
Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
-
Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
-
SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்