Tamil Nadu Housing Board Online Process : புதிய இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது

Tamil Nadu Housing Board Online Process : பொதுமக்களின் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட வாரியம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) ஆகும். இந்த வாரியத்தின் ஒரே நோக்கம் ஆனது புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் மற்றும் தரமான பொருட்களைப் பயன்படுத்தி அனைவருக்கும் வீடு வழங்குவதே ஆகும்.

Tamil Nadu Housing Board Online Process - வீட்டு வசதி வாரிய துறையில் ஆன்லைன் வசதி :

இந்த வீட்டு வசதி வாரிய துறையிலும் பொதுமக்களின் நன்மைகள், வசதிகளை கருத்தில்கொண்டு ஆன்லைன் வசதிகள் (Tamil Nadu Housing Board Online Process) செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தடையின்மை சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வீட்டு வசதி வாரிய துறையில் இணையதள வசதி ஆனது (Tamil Nadu Housing Board Online Process) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு திட்டங்களில் வீடு நிலம் மற்றும் வீடு வாங்கியவர்கள் அதை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற நினைத்தால், அதற்கு வீட்டு வசதி வாரியத்திடம் தடையின்மை சான்றிதழ்களை கட்டாயம் பெற வேண்டும்.

இந்த தடையின்மை சான்றிதழ்கள்  வாரிய திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களில், அதன் உரிமையாளர்கள் வீடு கட்ட வேண்டும் என்றாலும் கூட வாங்க வேண்டும். இதுநாள் வரை இந்த தடையின்மை சான்றிதழை பெற வேண்டுமானால், கோட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் நிலைமை மட்டுமே நடைமுறையில் இருந்து வந்தது. சில முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் தற்போது தொடர்ந்து எழுந்ததையடுத்து, இந்த ஆன்லைன் வசதி (Tamil Nadu Housing Board Online Process) துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் apply.tnhb-noc.com என்ற இணையதளம் வாயிலாக, தங்களுடைய விபரங்களை பதிவு செய்து, தடையின்மை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply