Tamil Nadu Is No 1 In Textile Exports : தமிழகம் ஜவுளி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது

Tamil Nadu Is No 1 In Textile Exports :

இந்தியாவில் உள்ள மக்களுக்கு விவசாயம் மற்றும் ஜவுளித் தொழில் ஆனது வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளாக விளங்குகின்றன. அதிலும் குறிப்பாக தமிழகம் ஆனது இந்திய அளவில் 50 சதவிகித நூற்பாலைகள் உள்ள மாநிலமாக உள்ளது. மேலும் தமிழகம் ஆனது அதிக பின்னலாடை உள்ளிட்ட ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கொண்ட மாநிலமாக விளங்குகிறது. தமிழகம் 20.78 சதவிகிதத்துடன் இந்திய ஜவுளி ஏற்றுமதியில் முதலிடத்தைப் (Tamil Nadu Is No 1 In Textile Exports) பிடித்துள்ளது. திருப்பூரின் ஜவுளி ஏற்றுமதி கடந்த ஆண்டு ரூ.33,000 கோடியாகவும் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் ரூ.27,000 கோடியாகவும் இருந்தது. இந்திய அளவில் ஜவுளித் தொழில் ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறது.

2023-24 நிதியாண்டின் ஜவுளி ஏற்றுமதி விவரங்கள் :

இந்தியாவின் ஜவுளிப் பொருள் ஏற்றுமதி ஆனது கடந்த 2023-24 நிதியாண்டில் 34.43 பில்லியன் அமெரிக்க டாலராகும். ஜவுளி ஏற்றுமதியில் இந்திய மாநிலங்களின் பங்களிப்புகள் பின்வருமாறு,

  • கடந்த 2023-24 ஆண்டு ஜவுளிப் பொருள் ஏற்றுமதியில் தமிழகம் ஆனது 20.78 சதவிகிதம் மற்றும் 7.15 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடத்தை வகிக்கிறது.
  • குஜராத் ஆனது 15.36 சதவிகிதத்துடன் (5.29 பில்லியன் டாலர்) இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
  • மகாராஷ்டிரா 11.54 சதவிகிதம் (3.97 பில்லியன் டாலர்) மூன்றாம் இடத்தை வகிக்கிறது.
  • ஹரியானா 10.52 சதவிகிதம் (3.62 பில்லியன் டாலர்) நான்காம் இடத்தை வகிக்கிறது.
  • உத்தரப் பிரதேசம் 9.87 சதவிகிதம் (3.40 பில்லியன் டாலர்) ஐந்தாம் இடத்தை வகிக்கிறது.
  • கர்நாடகா 7.64 சதவிகிதம் (2.63 பில்லியன் டாலர்)
  • ராஜஸ்தான் 4.64 சதவிகிதம் (1.60 பில்லியன் டாலர்)
  • பஞ்சாப் 4.11 சதவிகிதம் (1.41 பில்லியன் டாலர்)
  • மத்தியப் பிரதேசம் 3.81 சதவிகிதம் (1.31 பில்லியன் டாலர்)
  • டெல்லி 2.99 சதவிகிதம் (1.03 பில்லியன் டாலர்)
  • மேற்குவங்கம் 2.54 சதவிகிதம் (0.87 பில்லியன் டாலர்)
  • ஆந்திரா 1.34 சதவிகிதம் (0.46 பில்லியன் டாலர்)

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் உரை :

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் இதுகுறித்து கூறுகையில், “தற்போது திருப்பூருக்கு கொரோனாவுக்கு முந்தைய நிலை போன்று அதிக அளவிலான ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. கொரோனா தாக்குதலால் பெரும் நஷ்டத்தை சந்தித்த திருப்பூரின் ஜவுளித் தொழில் பெரிதாக மாறியுள்ளது. திருப்பூர் வெளிநாட்டு ஆர்டர்களால் பிஸியாக மாறியுள்ளது. இந்தியாவுக்கு போட்டி நாடுகளான பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள தொழிலாளர்கள் பிரச்சனை மற்றும் சீனாவின் ஜவுளிக் கொள்கைகளால் இந்தியாவுக்கு பிற நாடுகளில் இருந்து அதிக அளவிலான ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. வரும் ஆண்டில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் 20 சதவிகிதம் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் பின்னலாடைத் துறையில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் நலிவடைவதைத் தடுக்க மத்திய அரசு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வட்டி மானியமும், ஏற்றுமதி ஊக்கத் தொகையும் வழங்க முன் வர வேண்டும். வங்கதேசம் வழியாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அதிகப்படியான ஜவுளிகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க வங்கதேச ஜவுளிகளுக்கு இறக்குமதி வரியை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்.

Latest Slideshows

Leave a Reply