Tamil Nadu Online Services Website : பட்டா, பத்திரப்பதிவு சேவைகளை எளிமைப்படுத்த ஒரே இணையதளத்தில் 5 சேவைகள்

பட்டா, பத்திரப்பதிவு, மின் இணைப்பு, குடிநீர் வரி, சொத்துவரி போன்ற சேவைகளை எளிமைப்படுத்துவதற்கு தமிழக அரசு புதிய வசதியை (Tamil Nadu Online Services Website) அறிமுகம் செய்ய உள்ளது. பொதுமக்களின் நன்மைக்காக இந்த முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

பதிவுத்துறை :

  • தமிழக பதிவு துறையானது பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலக பணிகளும் தற்போது ஆன்லைன் மயமாகிவிட்டன. இதனால் பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. வெறும் 30 நிமிடத்திற்குள்ளேயே அனைத்து பதிவு பணிகளும் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற புதிய இணையதள வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மேலும் சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டமும் துவங்கப்பட்டுள்ளது. இப்படி தனித்தனியாக சேவைகள் இல்லாமல் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கினைத்து ஒரே இணையதளத்தில் எளிதாக மக்களுக்கு சேவை வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு :

  • இதற்கு முக்கிய காரணம் அரசு நிர்வாகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இடையே மூன்றாம் நபர் தலையீடு இருக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார்.
  • உதாரணமாக https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்தில் நிலம் தொடர்பாக பட்டா, சிட்டா, நில வரைபடம், பட்டா பெயர் மாற்றம் ஆகிய சேவைகளை இலவசமாக பெறலாம். ஆனால் பொதுமக்கள் இந்த சேவையை நேரடியாக பயன்படுத்தாமல் 3 ஆம் நபர்கள் மூலம் பணம் கொடுத்து சேவையை பெறுகின்றனர். இதை மையமாக வைத்துதான் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தனி இணையதளம் :

  • பத்திரப்பதிவு தொடர்பான தகவல்கள் அறிய அதற்கென உள்ள இணையதளத்திலும், பட்டா சேவையை பெற அதற்கென உள்ள இணையதளத்திலும், சொத்து வரி மற்றும் குடிநீர் வரி அறிந்துகொள்ள அதற்கென உள்ள இணையதளத்திலும், மின் இணைப்பு விவரம் பற்றி அறிய தனி இணையதளம் என ஒவ்வொரு இணையதளமாக தேடி தேடிச்சென்று பார்க்க வேண்டியிருக்கிறது.

Tamil Nadu Online Services Website - ஒரே இணையதளம் 5 சேவைகள் :

  • மேற்கண்ட அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து https://clip.tn.gov.in/clip/index.html என்ற புதிய இணையதள சேவையை தமிழக அரசு வடிவமைத்திருக்கிறது. ஊரக மற்றும் நகர்ப்புற நிலங்களின் பட்டா மற்றும் சிட்டா, பத்திரப்பதிவு விவரங்கள், நில வரைபட விவரங்கள், நிலம் தொடர்பான கோர்ட்டு மற்றும் வருவாய்த்துறை வழக்கு விவரங்கள், மின் இணைப்பு மற்றும் கட்டண விவரங்கள், சொத்து மற்றும் குடிநீர் வரி விவரங்கள் என மொத்தமாக ஒரே  இணையதளத்தில் (Tamil Nadu Online Services Website) பொதுமக்கள் பார்த்து கொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply