Tamil Nadu Pongal Gift Scheme 2024 : நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

Tamil Nadu Pongal Gift Scheme 2024 :

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் நிலையில், ரேஷன் கடைகள் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) செயல்படும் என அரசு கூட்டுறவுத்துறை தரப்பில் (Tamil Nadu Pongal Gift Scheme 2024) தெரிவித்துள்ளது. தை திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரூபாய் வழங்கப்படும்.

அதேபோல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த பொங்கல் பரிசுத் தொகை சில கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாக அறிவித்துள்ள அரசு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருள் அல்லாத அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பணம் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இதற்கான டோக்கன் வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்றவர்கள் வரும் 10ம் தேதி (நாளை) முதல் பொங்கல் பரிசு (Tamil Nadu Pongal Gift Scheme 2024) பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த பரிசுப் தொகுப்பு மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கமாக இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதால், இந்த வெள்ளிக்கிழமை (12ம் தேதி) ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளிலும் பயணாளர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுப் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

Tamil Nadu Pongal Gift Scheme 2024 : இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பும் சேர்த்து ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். கடந்த மாதம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த கட்டுப்பாடுகள் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply