Importance Of Tamil Nadu Property Expo 2023
தற்போதைய மார்க்கெட்டிங்கில் வர்த்தக கண்காட்சிகள் ஆனது முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ள நிறுவனங்கள் ஆனது தங்கள் துறையில் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்த மற்றும் வாடிக்கையாளர்களை சந்திந்து ஆர்வமுள்ள வாங்குபவர்களுக்கு தங்களது தயாரிப்புகளின் வலிமை, பெருமைகளை அழுத்தமாக விளக்கி நம்பிக்கையை வளர்த்து ஒரு நீண்ட கால அடிப்படையை உருவாக்க இந்த வர்த்தக கண்காட்சி திட்டம் ஆனது உதவுகிறது.
இந்த வர்த்தக கண்காட்சிகளில் விற்பவர்களும் வாங்குபவர்களும் வணிக வாய்ப்புகளை ஆராயவும் மற்றும் தெளிவான முடிவுகளோடு வணிகத்தை பரிவர்த்தனை செய்யவும் கூடுகிறார்கள். வழக்கமாக டெவலப்பர்கள் தங்களின் வளர்ந்து வரும் ப்ராஜெக்டுகள் மற்றும் முடிவடைந்த ப்ராஜெக்டுகளை ஆர்வமுள்ள வாங்குபவர்களுக்கு சிறப்பாக ஆய்வு செய்ய மற்றும் தேர்வு செய்ய உதவும் வகையில் பட்டியலிட்டு காட்சிப்படுத்துகிறார்கள்.
இந்த வர்த்தக கண்காட்சி திட்டத்தின் மூலம் பெரும்பாலான டெவலப்பர்கள் ஆர்வமுள்ள வாங்குபவர்களுக்கு தங்களுடைய தளங்களை நேரிடையாக பார்வையிட ஏற்பாடு செய்கிறார்கள் மற்றும் உதவுகிறார்கள்.
இந்த வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சி மூலம் தங்களது துறையில் உள்ள போட்டியாளர்களின் நிறுவனங்களின் செயல்பாடுகள், சமீபத்திய தங்களது சந்தையின் போக்குகள் மற்றும் வளர்ச்சி முன்னேற்றதிக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு தங்களது வர்த்தகத்தை மேம்படுத்த தொழில் துறையில் உள்ள நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
Tamil Nadu Property Expo 2023 முக்கிய நோக்கங்கள்
- ஒரு குறிப்பிட்ட தொழில் துறையில் தங்களது இருப்பை வாடிக்கையாளர்களுக்கு காட்டுதல் மற்றும் தெரியப்படுத்துதல் (i.e., the company’s presence in the particular industry)
- புதிய இலக்கு குழுக்களை மற்றும் வாடிக்கையாளர்களை சென்றடைதல் (i.e., Reaching the untapped segments and potential customers)
- வாடிக்கையாளர்களிடம் தங்களது சொந்த ப்ராஜெக்டுகள் பற்றிய நேரடி கருத்துக்களை பரிமாறுதல் மற்றும் பெறுதல். (i.e., the interaction between the customers and company)
- சமீபத்திய சந்தையில் உள்ள தங்களது வலிமையை வெளிப்படுத்துதல்.(i.e., Highlighting the status in the particular market)
- தகுந்த ஊழியருடன் தங்களது சொந்த ப்ராஜெக்டின் தளங்களை நேரிடையாக பார்வையிட ஏற்பாடு செய்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வளர்த்தல். (i.e., Arrange for the best site visit alongwith the informative and marketing person of the company)
- வாடிக்கையாளர்கள் ப்ராஜெக்டின் தளங்களை நேரிடையாக பார்வையிட சிறந்த வாகன வசதியை பயன்படுத்துதல். (i.e., Maintaining good transport facilities for customers site visit).
- தங்களது சிறப்பான அணுகுமுறை மூலம் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்தல். (i.e., Retention of customers by proper approach and attitude)
- சிறப்பாக வியாபாரம் செய்து விற்பனையை அதிகரித்தல். (i.e., Improving the influence and Increasing the sales)
- சிறந்த சந்தைப் பங்கைப் பெறுதல். (i.e., Getting the best market share)
- சிறந்த ஒத்துழைப்பு கூட்டாளர்களை அடையும் வாய்ப்பை பயன்படுத்துதல். (i.e., use the possibility to get the best partners)
- தொழில் போக்குகளைக் கண்டறிதல்
- வர்த்தக கண்காட்சிகளை தொடர்பு நிகழ்வுகளாகப் பயன்படுத்துதல்
- பணியாளர்களை ஊக்குவித்து புதியவர்களை வெல்வது
- பத்திரிகை தொடர்புகளை உருவாக்குதல்.
- ஒரு தொழில்துறையில் உள்ள பிற நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், மறுவிற்பனையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் ஆகியோரது எதிர்பாராத சந்திப்புகளை பெறுதல்
- போட்டியையும் போட்டியாளர்களையும் வர்த்தக கண்காட்சி பங்கேற்பாளர்கள் கவனித்து தொழிலில் மேம்பட என்ன வழங்க வேண்டும் மற்றும் எப்படி என்பதைப் பற்றிய கண்ணோட்டத்தைப் பெறுகிறார்கள்.
வெற்றிகரமான வர்த்தக கண்காட்சி திட்டமிடல்
- தெளிவான இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை முதலில் நிறுவனங்கள் தீர்மானிக்க வேண்டும்.
- தேவையான பட்ஜெட்டை உருவாக்க வேண்டும். 20′ x 20’க்கு குறைவான வர்த்தக நிகழ்ச்சி சாவடிகளுக்கு, ஒரு சதுர அடிக்கு சுமார் $300 அல்லது அதற்கு மேல் செலுத்த வேண்டி வரலாம். 20′ x 20′ மற்றும் பெரிய சாவடிகளுக்கு, ஒரு சதுர அடிக்கு $200-300 வரை செலுத்த வேண்டி வரலாம். கண்காட்சிக்கு ஆழமான ஆடியோவிஷுவல்/தொழில்நுட்பம் தேவைப்பட்டால் மேலும் பணம் செலுத்த வேண்டி வரும். (i.e., வர்த்தக கண்காட்சிகளின் விலையுயர்ந்த விவகாரங்களாக கண்காட்சி இடம், ஸ்டாண்ட் கட்டிடம், பொருட்கள் மற்றும் பிரசுரங்கள்/பட்டியல்கள்)
- சரியான காலகட்டத்தில் உள்ள கண்காட்சி நிகழ்ச்சியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- சரியான மற்றும் தேவையான விளம்பரங்கள் மூலம் நிறுவனங்கள் தங்கள் இருப்பை மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த வேண்டும். அதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும்.
- சிறப்பான முறையில் நிறுவனங்கள் தங்கள் கண்காட்சியை வடிவமைக்க வேண்டும். தங்கள் Stall-ஐ தனித்துவமான மற்றும் வளமான ஈர்ப்புடன் தனித்து நிற்கச் செய்ய வேண்டும்.
- சிறந்த அணுகுமுறை மற்றும் ப்ராஜெக்டுகள் தளங்களை பற்றிய தெளிவான குறிப்புக்கள் அறிந்த தகுந்த ஊழியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
- வர்த்தக கண்காட்சிகளில் வர்த்தக நிகழ்ச்சி மேலாளர்கள், வர்த்தக நிகழ்ச்சி பிரதிநிதிகள், வர்த்தக நிகழ்ச்சி சந்தைப்படுத்தல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வர்த்தக கண்காட்சி தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் Stall-ஐ நிர்வகிக்க, சேவை அல்லது தயாரிப்பை வாடிக்கையாளர்களுக்கு காட்ட மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களை மகிழ்விக்க சிறப்பான முறையில் வேலை செய்ய வேண்டும்.
உண்மையான வர்த்தக கண்காட்சிகளை எல்லாம் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக வாடிக்கையாளர்கள் நம்பியிருக்கிறார்கள்.