Tamil Nadu School Summer Holidays : மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மாற்றம்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எழுந்தது. மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்தனர். பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் (Tamil Nadu School Summer Holidays) அளித்துள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. தற்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. தேர்வு ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது. அதேபோல், 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பருவத்தேர்வு நேற்றுடன் (ஏப்ரல் 5) முடிவடைந்தது. அவர்களுக்கு இன்று (ஏப்ரல் 6) முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற இருந்த ஆண்டு இறுதி தேர்வுகள் முறையே 22 மற்றும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 6ம் தேதி முதல் 21ம் தேதி வரை தேர்வுகள் இருக்காது. இதனால் பள்ளிகளுக்கு அப்போது கோடை விடுமுறை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுந்தது. மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்தனர்.

Tamil Nadu School Summer Holidays :

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை மற்றும் மக்களவைத் தேர்தல் பணிகள் காரணமாக, ஏப். 6ம் தேதி முதல், 21ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது (Tamil Nadu School Summer Holidays) என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. பின்னர் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். மறுநாள் ஏப்ரல் 24ம் தேதி முதல் மீண்டும் கோடை விடுமுறை தொடங்கும். பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதே நேரத்தில், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் பள்ளியின் கடைசி வேலை நாளான ஏப்ரல் 26-ஆம் தேதி வரை பொது விடுமுறை அல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும். அன்றைய தினங்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள்கள் மதிப்பீடு செய்தல் மற்றும் இதர அலுவலக பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply