Tamil Nadu Startup Incubator Conference : தமிழ்நாடு ஸ்டார்ட்அப் இன்குபேட்டர் மாநாட்டின் சிறப்புகள்
- ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான முக்கியத்துவம் ஆனது தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழக அரசு இந்த நிறுவனங்களை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும், புதிதாக தொடங்குபவர்களுக்கு தேவையான வசதிகளை உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்கான இன்குபேட்டர்கள் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆனது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சமீபத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் இன்குபேட்டர் மாநாடு (Tamil Nadu Startup Incubator Conference) ஆனது நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றினார்.
Tamil Nadu Startup Incubator Conference - தமிழ்நாட்டில் ஸ்டாட் அப் நிறுவனங்கள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு உரை :
- 2021ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஸ்டாட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஆனது 2300 ஆக இருந்தது. தமிழ்நாட்டில் தற்போது ஸ்டாட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஆனது 7600-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதில் 50% ஸ்டாட் அப் நிறுவனங்கள் ஆனது பெண்கள் நிர்வகிக்கும் ஸ்டாட் அப் நிறுவனங்கள் ஆகும்.
- தமிழ்நாட்டை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான உலகின் தலைசிறந்த இடமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆனது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மற்றும் அதற்காக தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் மகளிர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொழில் வளர் காப்பகங்களை பயன்படுத்த நிதி உதவி, தொழில் வளர் காப்பகங்களுக்கு வளர் நிதி, தொழில் வளர் காப்பகங்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றை வழங்கினார்.
- 15 மகளிருக்கு மகளிர் ஸ்டார்ட்அப் திட்டத்தில் தொழில்காப்பு நிதியாக ரூ.14.70 லட்சம் வழங்கப்பட்டது. 15 தொழில் வள காப்பகங்களை வளர்க்க தலா ரூ.5 லட்சம் என மொத்தமாக ரூ.75 லட்சம் நிதியுதவி ஆனது அளிக்கப்பட்டது.
- Smart Card ஆனது மனித வளம், நிதி மேம்பாடு, ஊடக விளம்பரங்களை சலுகை விலையில் பெற என 52 தொழில் வள காப்பகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- தமிழக ஸ்டார்ட் அப் துறை ஆனது இந்த Smart Card-டில் சில சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான சில சேவைகளை பெறும் போது, அதன் விலையில் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
- ரூ.13.95 லட்சம் நிதி ஆனது பசுமை தொழில்துட்பம், மகளிர் தொழில் முனைவோர் என 132 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கும் நிதி ஆனது வழங்கப்பட்டுள்ளது.
- இளம் தொழில் முனைவோரை அதிக அளவில் உருவாக்குவதற்கு தமிழக அரசு ஆனது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
- ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான நிதி சார்ந்த சேவை எளிதில் பெரும் வகையில் HDFC Bank, Federal Bank, SBI Bank, Yes Bank ஆகிய 4 வங்கிகளுடன் தமிழக அரசு ஆனது புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஸ்டார்ட்அப்பின் இயக்குநர் சிவராஜா ராமநாதன், துறை செயலாளர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Latest Slideshows
- Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
- Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
- Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
- RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
- Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
- Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
- Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
- Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
- SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்