Tamil Nadu Thermal Power Stations : தமிழ்நாட்டில் உள்ள Thermal Power Stations மின்னுற்பத்தி திறன் அதிகரிப்பு

Increase In Power Generation Capacity In Tamil Nadu Thermal Power Stations :

தமிழ்நாடு மாநிலம் மின் உற்பத்தியில் நாட்டிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களில் (Tamil Nadu Thermal Power Stations) மின்னுற்பத்தித் திறன் 5,120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 4,320 மெகாவாட் திறனில் 5 அனல் மின் நிலையங்களை தமிழக மின்வாரியம் பெற்றுள்ளது. நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் ஆனது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் :

  • தூத்துக்குடி அனல் மின்னுற்பத்தி நிலையம், தூத்துக்குடி மாவட்டம் – 1,050 மெகாவாட் திறன்.
  • மேட்டூர் அனல் மின்னுற்பத்தி நிலையம், மேட்டூர், சேலம் மாவட்டம் – 840 மெகாவாட் திறன்.
  • மேட்டூர் விரிவாக்கத்தில் அனல் மின்னுற்பத்தி நிலையம் – 600 மெகாவாட் திறன்.
  • வடசென்னை அனல் மின்னுற்பத்தி நிலையம் – 630 மெகாவாட் திறன்.
  • வடசென்னை விரிவாக்கத்தில் அனல் மின்னுற்பத்தி நிலையம் – 1,200 மெகாவாட் திறன்.
  • வடசென்னை-3 அனல் மின் நிலையம் – 800 மெகாவாட் திறன்.

இந்த 6 முக்கிய அனல் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதை தமிழக அரசு பெரிதும் நம்பியுள்ளது. இந்த அனல் மின் நிலையங்களின் வேலை, அமைப்பு மற்றும் செயல்பாடு மற்றும் பிற ஆற்றல் உற்பத்தி வசதிகளை TANGEDCO (தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லிமிடெட்) கவனித்துக் கொள்கிறது. மாநில அரசுக்கு சொந்தமான TANGEDCO ஆனது 2010 இல் உருவாக்கப்பட்டது. இது மாநிலத்தில் அனல் ஆற்றல் ஆலைகளை இயக்குகிறது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் அமைக்கப்பட்டுள்ள வடசென்னை-3 அனல் மின் நிலையம் மற்ற மின்நிலையங்களை விட அதிக திறன் உடையது. இந்த வடசென்னை-3 அனல்மின் நிலையம் ஆனது ரூ.10,158 கோடி செலவில் 800 மெகாவாட் திறனில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அனல் மின் நிலையத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி முதல் மின்னுற்பத்தி ஆனது தொடங்கப்பட்டுள்ளது. இந்த வடசென்னை-3 அனல் மின் நிலைய செயல்பாட்டை தொடர்ந்து மின்வாரிய அனல்மின் நிலையங்களின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தித் திறன் 5,120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதனால் கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்படும் மின்தேவையை தமிழக மின்வாரியம் ஆனது எளிதாக பூர்த்தி செய்யும். தமிழகத்தில் அரசு நிறுவியுள்ள மிகப்பெரிய அனல் மின் நிலையங்கள் மூலம் தமிழ்நாடு ஆனது 100% கிராம மின்மயமாக்கலை எட்டியுள்ளது. தமிழகத்தில் அதிக அளவு மின் உற்பத்திக்கு (Tamil Nadu Thermal Power Stations) அரசு நிறுவியுள்ள மிகப்பெரிய அனல் மின் நிலையங்களே காரணம் ஆகும்.

Latest Slideshows

Leave a Reply