Tamil Nadu’s Own Tax Revenue-வின் பங்கு 70% மேலாக நிலையானதாக உள்ளது - RBI Report

Tamil Nadu’s Own Tax Revenue :

RBI-ன் State Finances: A Study of Budgets of 2023-24′ (மாநில நிதிகள்: 2023-24 பட்ஜெட்களின் ஆய்வு) என்ற தலைப்பில் பகிரப்பட்ட தரவுகளின்படி, தமிழகத்தின் ஒட்டுமொத்த வரி வருவாயில் (Tamil Nadu’s Own Tax Revenue) தமிழக மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் (SOTR – State’s Own Tax Revenue) பங்களிப்பு ஆனது 70%க்கு மேல் நிலையானதாக உள்ளது. அரசாங்கத்திற்கு மக்கள் அல்லது நிறுவனங்களால் செலுத்தப்படும் வரி (Tax) என்பது ஒரு கட்டாயத் தொகையாகும். அரசின் வருவாயின் முதன்மையான ஆதாரம் வரி (Tax) ஆகும். GST மற்றும் Tax Revenue ஆகியவை இந்திய அரசாங்கத்தின் முக்கிய வருவாய் ஆதாரங்கள் (Major Sources Of Revenue) ஆகும். GST மற்றும் Tax Revenue இரண்டும் அரசாங்கத்தின் மொத்த வருவாயில் (Government’s Overall Revenue) சுமார் 90% ஆகும். மொத்த வரி வருவாயில் (Overall Tax Revenue) GST ஆனது 57% பங்களிக்கிறது.

அரசாங்கங்களால் வரிவிதிப்பு (Taxation) மூலம் சேகரிக்கப்படும் வருமானம் வரி வருவாய் (Tax Revenue) ஆகும். இது அரசாங்கத்தின் கீழ் உள்ள வரிகள் மற்றும் பிற அனைத்து கடமைகளிலிருந்து பெறப்பட்ட அனைத்து ரசீதுகளின் கூட்டுத்தொகை (Sum Of All Receipts From The Taxes) ஆகும். இந்த வரி வருவாய் ஆனது தனிநபர்கள், பொது நிறுவனங்கள், வர்த்தகம், இயற்கை வளங்கள் மீதான ராயல்டி மற்றும்/அல்லது வெளிநாட்டு உதவி போன்ற ஆதாரங்களில் இருந்து பெறப்படலாம். Corporate Tax (நிறுவன வரி) ஆனது இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், Corporate Tax மூலம் இந்திய அரசாங்கம் ₹2.5 டிரில்லியன் வருவாயைப் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த வரி வருவாயில் சுமார் 40% ஆகும்.

Tamil Nadu’s Own Tax Revenue : தரவுகளின்படி, GST-க்கு முந்தைய காலத்தில் 2015-16 முதல் 2016-17 வரையில் தமிழ்நாட்டின் மொத்த வரி வருவாயில் SOTR 78.8% ஆக இருந்தது. SOTR-இன் (State’s Own Tax Revenue) பங்கு ஆனது 2018-19-2019-20 இன் GSTக்குப் பிந்தைய மற்றும் கோவிட்-க்கு முந்தைய காலகட்டத்தில், 79.1% ஆக இருந்தது. கோவிட்க்குப் பின், SOTR பங்கு 78.9% என்று RBI அறிக்கை கூறுகிறது.

  • 2015-16 முதல் 2016-17 வரை – SOTR  Share 78.8%
  • 2018-19 முதல் 2019-20 வரை – SOTR  Share 79.1%
  • 2021-22 முதல் 2022-23 வரை – SOTR  Share 78.9%

RBI-ன் State Finances: A Study Of Budgets of 2023-24′ Report – தமிழகத்தின் ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் (SOTR) பங்களிப்பு 70%க்கு மேல் நிலையானதாக உள்ளது.

Latest Slideshows

Leave a Reply