Tamil New Year Celebration : தமிழ் வருட பிறப்பு வரலாறும் முக்கியத்துவமும்

தமிழர்கள் சூரியனை அடிப்படையாக வைத்து தமிழ் புத்தாண்டு கொண்டாடி வருகின்றனர். 12 மாதங்களில் (Tamil New Year Celebration) சித்திரை மாதமே தமிழ் நாட்காட்டியின் முதல் மாதமாக உள்ளது. அறிவியல் ரீதியாக சூரியன் பூமியை சுற்றி வர 365 நாட்கள் எடுத்து கொள்கிறது. இதை வைத்து தான் தமிழ் புத்தாண்டின் கால அளவு பின்பற்றப்படுகிறது. சூரியன் மீன ராசியிலிருந்து, மேஷ ராசியில் நுழைவதை வைத்து தமிழ் புத்தாண்டு கணக்கிடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு பெரும்பாலும் ஏப்ரல் 13, 14, 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த வருடம் ஏப்ரல் 14-ம் தமிழ் வருட பிறப்பு தமிழகத்தில் மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு வரலாறு (Tamil New Year Celebration)

தமிழ் வருட பிறப்பு பண்டைய ‘சோழர் காலத்தில்’ இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. சங்ககாலத்திலிருந்தே தமிழர்கள் கால கணக்கீட்டில் முன்னோடிகளாக திகழ்ந்துள்ளனர். தமிழ் கலாச்சாரத்தில் விவசாயம், பண்டிகைகள், கோயில் விழாக்கள் ஆகியவை பாரம்பரியமாக (Tamil New Year Celebration) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் வருட பிறப்பு நாளன்று மக்கள் தங்களின் வீடுகளைத் தூய்மைப்படுத்தி, கோலங்கள்  இட்டு, தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இந்த நாள் தமிழர்களின் புதிய தொடக்கத்தை குறிக்கும் முக்கிய நாளாகும்.

Tamil New Year Celebration - Platform Tamil

தமிழ் புத்தாண்டின் முக்கியத்துவம்

தமிழ் புத்தாண்டு, தமிழ் பாரம்பரியத்தின் அடையாளமாகும். இது தமிழ் மொழியின் கால கணிப்புமுறை மட்டுமல்லாமல், தமிழ் சமூகத்தின் பண்பாட்டினையும், அறிவியலையும், ஆன்மீகத்தையும் வெளிக்காட்டுகிறது. மேலும் தமிழ் புத்தாண்டு பசுமை மற்றும் (Tamil New Year Celebration) வேளாண்மை சார்ந்த துவக்கமாகும். தமிழ் புத்தாண்டு தினத்தன்று ‘சித்திரை திருவிழா’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மீனாட்சியம்மன், முருகன் போன்ற தெய்வங்களுக்கு வழிபாடுகள் நடைபெறும். இதில் மதுரையில் நடைபெறும் ‘சித்திரை திருவிழா’ உலகப்புகழ் பெற்றதாகும்.

Latest Slideshows

Leave a Reply