Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்

Tamilnadu Alert App - உடனுக்குடன் மழை தகவல்களை பெற உதவும் :

உதயநிதி ஸ்டாலின் உடனுக்குடன் மழை தகவல்களை பெற Tamilnadu Alert App அறிமுகம் செய்துள்ளார். இந்த தமிழக அரசின் Tamilnadu Alert Mobile App மொபைல் செயலி மூலம் மழை தொடர்பான வானிலை தாக்குதல்களை உடனடியாக பெறலாம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஆனது மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. தமிழக அரசு வடகிழக்கு பருவமழையில் இருந்து பொதுமக்களின் உயிரும் மற்றும் உடைமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை  ஆய்வு செய்தார்.

தமிழக அரசின் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

  • சுமார் 20 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மழை தொடர்பான தகவல்கள் ஆனது பகிரப்படும்.
  • சென்னையின் அனைத்து வார்டுகளிலும் மக்களுக்கு பயன்படும் வகையில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 
  • 13 ஆயிரம் தன்னார்வலர்கள் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
  • 1913 என்ற அவசர உதவி எண்ணை மக்கள் மழைக்காலத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • சுமார் 150 பேர் 4 ஷிப்டுகளாக கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரிய உள்ளனர். 
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மெட்ரோ நிறுவன ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மின் ஊழியர்கள் பிற மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
  • மண்டல வாரியாக IAS அதிகாரிகள் மழை தொடர்பான பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • மின்சார வாரியத்திற்கு தரைமீதான அனைத்து கேபிள்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply