பூகம்பத்திலும் தைவான் தைபே 101 கட்டிடம் சரியாமல் கம்பீரமாக நிற்க “Tamper Baby” காரணம்

தைபே 101 என்பது தைவான் நாட்டின் மிகப்பெரிய கட்டிடம் ஆகும். சமீபத்தில் தைவான் நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் மிகவும் வலிமையான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் அந்த நாட்டில் இருந்த பெரிய கட்டிடமான தைபே 101 மிகக் குறைந்த சேதத்துடன் தப்பியது. வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் இந்தக் கட்டிடம் பாதுகாப்பாக இருந்துள்ளது. மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் தைபே 101 தப்பியதற்கான காரணம் தைபே 101ல் உள்ள பெண்டுலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தைபே 101 கட்டிடத்தின் நடுவே ஊசலாடும் பெண்டுலம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தைபே 101  கட்டிடத்தின் மையத்தில் உள்ள பெரிய மஞ்சள் பெண்டுலம் அமைப்பு தான் அந்த நில அதிர்வை உள்வாங்கி இருக்கிறது. தைவானில் பூகம்பம் ஏற்பட்டால் இந்த கட்டிடம் பாதிக்கப்படக்கூடாது என்பதை மனதில் வைத்தே இந்த வடிவமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதுவே வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் இந்தக் கட்டிடம் பாதுகாப்பாக இருந்தற்கான காரணம் ஆகும்.

"Tamper Baby" பெண்டுலம் அமைப்பு மற்றும் செயல் முறை :

தைபே 101 கட்டிடத்தின் மையத்தில் உள்ள பெரிய மஞ்சள் பெண்டுலம் அமைப்பு ஆனது பூகம்பங்கள் அல்லது சூறாவளிகளின் போது முன்னும் பின்னுமாக நகர்ந்து கட்டிடத்தில் ஏற்படும் எந்தவொரு தீவிரமான ஊசலாட்டத்தின் சக்தியையும் தடுக்கிறது. இது 40% வரை கட்டிடம் தள்ளாடுவதை குறைக்கிறது.

  • இந்த பெண்டுலம் அமைப்பு “Tamper Baby” என்ற அழைக்கப்படுகிறது. இந்த “டேம்பர் பேபி” எஃகு மூலம் உருவாக்கப்பட்டது ஆகும்.
  • தைபே 101 கட்டிடத்தின் மையத்தில் தரையில் இருந்து 1,000 அடிக்கு மேல் 660 டன் எடையுள்ள அந்த பெண்டுலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
  • இந்த பெண்டுலம் பூகம்பங்கள் அல்லது சூறாவளிகளின் போது முன்னும் பின்னுமாக நகரும். இப்படி நகர்வது கட்டிடத்தில் ஏற்படும் எந்தவொரு தீவிரமான ஊசலாட்டத்தின் சக்தியையும் தடுக்கிறது. இந்த பெண்டுலம் ஆனது நிலநடுக்கம் அல்லது பலத்த காற்றின் போது,​​ கட்டிடம் ஊசலாடுவதை 40% வரை குறைக்கும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
  • 87 மற்றும் 92வது தளங்களுக்கு இடையில் இந்த பெண்டுலம் ஆனது நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.
  • சுமார் 18 அடி விட்டம் கொண்ட இந்த பெண்டுலம் ஆனது 41 எஃகு அடுக்குகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த பெண்டுலம் ஆனது அதிவேகமாகக் காற்று அடிக்கும்போதும் அல்லது நில நடுக்கம் ஏற்படும்போதும் அதற்கேற்ப அட்ஜெஸ்ட் செய்து கட்டிடத்தைப் பாதுகாக்கும்.

தைபே 101 - ஒரு குறிப்பு :

ஒரு காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாக இந்த தைபே 101 கட்டிடம் தான் இருந்தது. தைவானில் இப்போதும் கூட இந்த தைபே 101 கட்டிடம் தான் ஒரு முக்கிய கட்டிடமாக உள்ளது. பூகம்பம் ஏற்பட்டால் இந்த கட்டிடம் பாதிக்கப்படக்கூடாது என்பதை மனதில் வைத்தே இதை வடிவமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். பொதுவாக காற்றின் வேகத்தில் உயரமான கட்டிடம் எல்லாம் அதிகம் தள்ளாடும். அதைச் சமாளிக்கவே இந்த காற்றைத் தணிக்கும் பந்து பயன்படுகிறது. பலத்த காற்று அல்லது நிலநடுக்கம் ஏற்படும் போது இந்த பெண்டுலம் அமைப்பு கட்டிடம் அசைவதை வெகுவாக குறைக்கும். உயரமான கட்டிடத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

பல உயரமான கட்டிடங்களில் இந்த பெண்டுலம் அமைப்பு இருக்கும். ஆனால், கான்கரீட் பில்லர்களுக்கு இடையே இந்த பெண்டுலம் அமைப்பு மறைந்து இருக்கும். ஆனால், தைபே 101ல் மக்கள் பார்வைக்குத் தெரியும் வகையில் இந்த பெண்டுலம் அமைப்பு இருக்கும். பார்வையாளர்களை ஈர்க்கும் அழகியல் சார்ந்த விஷயமாக இந்த பெண்டுலம் அமைப்பு  இருக்கிறது. இணையத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது உள்ளே இருந்த அந்த பெண்டுலம் எப்படி முன்னும் பின்னும் நகர்ந்து கட்டிடத்தைப் பாதுகாத்தது என்பது குறித்த வீடியோ ஆனது வேகமாகப் பரவி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply