Tanjore Flight Service : டெல்டா மக்கள் கனவு 33 வருடங்களுக்கு பின் நிஜமாகிறது

தஞ்சைக்கு விமான சேவை (Tanjore Flight Service) தொடங்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் பல ஆண்டு கனவு ஆகும். ஒரு காலத்தில் தஞ்சையில் விமான சேவை இருந்தது. தற்போது 33 ஆண்டுகளுக்கு பின் தஞ்சையில் விமான சேவை (Tanjore Flight Service) தொடங்கப்பட உள்ளது. தற்போது தஞ்சையில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சென்னை, திருச்சி, கோவைக்கு இணையாக இனிமேல் தஞ்சாவூரிலும் விமான சேவை தொடங்கப்படும் என்று இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு ஆனது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Tanjore Flight Service - தஞ்சை விமான நிலையம் பற்றிய தகவல்கள் :

ஒரு புதிய உள்நாட்டு முனையத்தை 200 கோடி செலவில் தஞ்சையில் உருவாக்க (Tanjore Flight Service) உள்ளதாக அறிவித்துள்ளது. புதிய உள்நாட்டு முனையத்திற்கு 4 வழி அணுகுமுறை சாலை அமைக்கப்படும். தஞ்சாவூர் விமானப்படை தளம் அருகே உள்ள பகுதியில் இந்த விமான நிலையம் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய உள்நாட்டு முனையத்திற்காக 26.5 ஏக்கர் நிலம் ஆனது இந்திய விமானப்படையிடம் இருந்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் புதிய உள்நாட்டு முனையத்திற்கான பணிகள் ஆனது விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூர் டூ சென்னைக்கு ஏர் டாக்சி நிறுவனம்  ஆனது 20 பேர் பயணம் செய்ய கூடிய சிறிய அளவிலான விமானத்தை இயக்க உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த விமான சேவை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சை விமான சேவை தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உரை :

விமான போக்குவரத்து விரைவில் (Tanjore Flight Service) தஞ்சையில் செயல்படுத்தப்படும். டெல்டா மாவட்டங்களுக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. பல நிறுவனங்கள் இங்கே குவிய தொடங்கி உள்ளன. ஸ்டார்ட் அப் ஹப்பாக (Start-up Hub) டெல்டா மாவட்டங்களை மாற்றும் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கே ஐடி பார்க் வருகின்றன. இங்கே உள்ள இளைஞர்கள் நல்ல பலன் அடைவார்கள். அதேபோல் தஞ்சையில் விவசாயம் சார்ந்த மாசை ஏற்படுத்தாத தொழிற்பேட்டைகள் கொண்டு வரப்படும். எந்த மாசும் இல்லாத தொழிற்பேட்டைகள் ஆனது கொண்டு வரப்படும். விவசாய மக்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை.

Latest Slideshows

Leave a Reply