TASLS New C295 Aircraft Manufacturing Plant : TASL புதிய C295 விமான உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பானிஷ் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் குஜராத்தின் வதோதராவில் Tata Advanced Systems Ltd-ன் (TASL) புதிய C-295 விமான உற்பத்தி ஆலையை (TASLS New C295 Aircraft Manufacturing Plant) 28.10.2024 அன்று திறந்து வைத்தனர். குஜராத்தின் வதோதராவில் அமைந்துள்ள TASL-ன் வளாகத்தில் Tata Advanced Systems மற்றும் Airbus ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்திய ராணுவத்துக்கு தேவையான C-295 ரக விமானங்களை தயாரிக்கும் ஆலை ஆனது அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும். தற்போது ராணுவ உபகரணங்களுக்காக வெளிநாட்டை நம்பி இருக்கும் நிலையை இந்த ஆலை குறைக்கும்.
TASLS New C295 Aircraft Manufacturing Plant
குஜராத்தின் இந்த ஆலை ஆனது 600 நேரடி உயர் திறன் கொண்ட வேலைகள் 3,000-திற்க்கும் மேற்பட்ட மறைமுக வேலைகள் மற்றும் கூடுதலாக 3,000 நடுத்தர திறன் கொண்ட வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலைக்கு (TASLS New C295 Aircraft Manufacturing Plant) கடந்த 2022-ம் ஆண்டு October மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்திய அரசு ஆனது ஸ்பெயின் அரசுடன் 56, C-295 விமானங்களை உற்பத்தி செய்ய ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஸ்பெயின் ஆனது இந்த ஒப்பந்தத்தின் படி C-295 விமானங்களில் 16 விமானங்களை தயாரித்து இந்தியாவுக்கு வழங்க உள்ளது. மீதமுள்ள 40 விமானங்கள் ஆனது TASL நிறுவனத்தால் (TASLS New C295 Aircraft Manufacturing Plant) இந்தியாவில் தயாரிக்கப்படும். ஒரு விமானத்திற்கு தேவையான 14,000 பாகங்களில் 13,000 பாகங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த C-295 விமானத்தின் போக்குவரத்து திறன் ஆனது 5-10 டன் ஆகும். தற்போது இந்திய விமானப்படை Avro-748 விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்திய விமானப்படை இந்த Avro-748 விமானங்களிலிருந்து C-295 விமானங்களுக்கு மாறிவிடும்.
இந்த ஆலை (TASLS New C295 Aircraft Manufacturing Plant) ஆனது இந்தியாவில் ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இருக்கும். இந்த விமான தயாரிப்பு திட்டத்துக்கு Tata நிறுவனம் மட்டுமல்லாது Bharat Electronics மற்றும் Bharat Dynamics ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் சில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கும். இந்த ஆலை ஆனது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த மைல்கல்லாக அமைய உள்ளது.
Latest Slideshows
- Children's Day 2024 : குழந்தைகள் தின வரலாறும் முக்கியத்துவமும்
- Miss You Teaser : சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியீடு
- Shiva Rajkumar In Thalapathy 69 : தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்
- ITBP Recruitment 2024 : இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பிரிவில் 526 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- ISRO Provide Navigation Signal : மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
- அரியலூரில் ரூ1000 கோடி முதலீட்டில் தைவானின் Teen Shoes நிறுவனம்
- Indian Team New Captain : இந்திய அணியின் கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்
- Discovered A New Planet : பூமி மாதிரியே இருக்கும் புது கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
- Kanguva Trailer : சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
- Mushroom Benefits : தினமும் காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்