TATA Curvv 2024 கார் குறித்த Updates ஆனது வெளியாகியுள்ளது

Bharat Mobility Global Expo 2024 :

இந்தியாவின் முதல் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo 2024) ஆனது பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 3 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo 2024) ஆனது இந்தியாவின் முழு வாகன இயக்கம் மற்றும் வாகன மதிப்பு சங்கிலிகள் திறன்களை வெளிப்படுத்தியது.

இந்த கண்காட்சியில் வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்புகள், மாநில அமர்வுகள், சாலைப் பாதுகாப்பு அரங்கு மற்றும் கோ-கார்டிங் போன்ற பொது மையக் காட்சிகள் இடம்பெற்றன. இந்த 2024-ஆம் ஆண்டு 600க்கும் மேற்பட்ட வாகன உதிரிபாக தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இது சுமார் 800 கண்காட்சியாளர்களை ஈர்த்தது. வணிக வல்லுநர்கள் உட்பட 1,50,000 பதிவு செய்யப்பட்ட பார்வையாளர்கள் சாதனை படைத்ததன் மூலம் இந்த நிகழ்வு பெரும் ஆதரவைப் பெற்றது.

Bharat Mobility Global Expo 2024-வில் TATA Motors-ன் TATA Curvv 2024 காட்சிப்படுத்தப்பட்டது :

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024-ம் துவக்க நாளில் TATA Motors நிறுவனமானது தனது புத்தம் புதிய TATA Curvv 2024-யை காட்சிப்படுத்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு Auto Expo-வின் TATA Motors நிறுவனம் Curvv Concept-டை அறிமுகப்படுத்தியது. அடுத்து வரும் 2024 April மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் TATA Curvv 2024 ஆனது பல்வேறு வளர்ச்சி நிலைகளில் காட்சிப்படுத்தப்பட்டது. TATA Curvv 2024 ஆனது அதன் நேர்த்தியான SUV மற்றும் அதன் தனித்துவமான Coupe ஸ்டைலிங் மூலம் தனித்து நிற்கிறது மற்றும் காண்போரின் கண்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. Nexon Facelift-டை நினைவூட்டும் வகையில் Extend செய்யப்பட்ட LED Light Bar, Piano Black மற்றும் Body Colour Finish கலவையுடன் Redesign செய்யப்பட்ட கிரில் மற்றும் Harrier மற்றும் Safari Facelift-களைப் போலவே புதுப்பிக்கப்பட்ட Front மற்றும் Back Bumpers ஆகியவை குறிப்பிடத்தக்க Updates ஆகும்.

Key Specifications of Tata Curvv :

  • Engine – 1498 cc (Engine Displacement)
  • Power – 112.42 BHP
  • Torque – 260 Nm
  • Drive Type – 2WD
  • Fuel – Petrol
  • Transmission – Manual
  • No of Cylinders – 4
  • Body Type – SUV
  • Seating Capacity – 5
  • Boot Space (Litres) – 422

360 டிகிரி கேமரா மற்றும் 18 இன்ச் அலாய் வீல்களுடன் கூடிய Full LD லைட் செட்டப் உள்ளது. இந்தியாவில் Tata Curvv வரும் April 02, 2024-ல் 10.50 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Tata Curvv ஆனது  சிவப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும்.

Tata Curvv இன் போட்டியாளர்கள் :

  • Nissan Magnite
  • Hyundai Exter
  • Mahindra XUV300
  • Hyundai Venue
  • Honda Elevate

ஆகியவற்றுடன் Tata Curvv போட்டியிடும். கண்களை கவரும் டிசைன் மற்றும் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் இந்திய SUV மார்க்கெட்டில் போட்டி அலைகளை உருவாக்க Tata Curvv தயாராக உள்ளது.

Latest Slideshows

Leave a Reply