TATA Won IPL Sponsorship : 5 ஆண்டுகளுக்கு IPL தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற்றது TATA

மார்ச் 22 ஆம் தேதி IPL கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது :

இன்னும் 2 மாதங்களில் 17 வது சீசனுக்கான IPL கிரிக்கெட் தொடர் ஆனது தொடங்கவுள்ளது. 2023 டிசம்பர் மாதம் ஏற்கனவே மினி ஏலம் முடிவடைந்த நிலையில், மார்ச் 22ஆம் தேதி IPL கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது. இருந்தபோதும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி ஆனது அறிவித்த பின்னரே, IPL கிரிக்கெட் அட்டவணையை வெளியிட IPL நிர்வாகம் ஆனது முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அணி நிர்வாகங்கள் மார்ச் முதல் வாரம் முதலே தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் ஜூன் 1 ஆம் தேதி T20 உலகக்கோப்பை தொடர் ஆனது நடக்கவுள்ளதால், மே மாதத்தின் 2வது வாரத்திலேயே IPL இறுதிப்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் IPL தொடருக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை BCCI முடித்துள்ளது. சீனாவை சேர்ந்த மொபைல் நிறுவனமான விவோ ஆனது 2018ஆம் ஆண்டு நடைபெற்ற IPL  டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை வென்றது. அந்த ஒப்பந்தம் ஆனது 5 ஆண்டுகளுக்கு ரூ.2199 கோடிக்கு முடிவடைந்தது. ஆனால் இந்தியா – சீனா இடையிலான வேறுபட்ட உறவு காரணமாக, விவோ உடனான ஒப்பந்தத்தை IPL  நிர்வாகம் ஆனது முறித்து கொண்டது. அதனால் கடந்த இரு சீசன்களின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஆனது ஒப்பந்தம் செய்யப்பட்டது. TATA நிறுவனம் ஆண்டுக்கு ரூ.365 கோடி கொடுக்க (TATA Won IPL Sponsorship) முன்வந்தது.

TATA Won IPL Sponsorship - ஐபிஎல் தொடரால் BCCI-க்கு கொட்டும் பணம் :

இந்த காலக்கட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான டைட்டில் ஸ்பான்சஷிப் டெண்டர் 2023 டிசம்சர் கடைசி வாரத்தில் கோரப்பட்டது. IPL  நிர்வாக குழு ஆனது இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் ரூ.5 லட்சம் முன்தொகையுடன் விண்ணப்பிக்க அறிவித்தது. இந்த நிலையில் ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனம் திடீரென இதில் உள்ளே வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு ரூ.2500 கோடி கொடுக்க தயாராக இருப்பதாக ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனம் கூறியது. இதைத்தொடர்ந்து IPL  நிர்வாக குழு ஆனது டாடா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. TATA  நிறுவனம், “We Are Ready To Match The Same Amount Rs.2500 Crore ” என ஒப்புக் கொண்டதால் இறுதியாக IPL டைட்டில் ஸ்பான்சரை (TATA Won IPL Sponsorship) மீண்டும் டாடா நிறுவனமே கைப்பற்றியது (டாடா நிறுவனமும் 5 ஆண்டுகளுக்கு ரூ.2500 கோடி  ஒப்புக் கொண்டது).

IPL  நிர்வாகம் இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே BCCI-க்கு ஒளிபரப்பு உரிமை பிரிந்ததன் காரணமாக ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிக வருமானம் கிடைத்தது. தற்போது டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தமும் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதால், IPL தொடரின் மதிப்பு மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரால் ரூ.2,500 கோடி வருமானம் பார்த்தது BCCI.

Latest Slideshows

Leave a Reply