2023 ஆம் ஆண்டிற்கான Tata Literature Lifetime Achievement Award பெற்ற எழுத்தாளர் அம்பை

எழுத்தாளர் அம்பைக்கு Tata Literature Lifetime Achievement Award வழங்கப்பட்டது

சிறந்த இலக்கியவாதிகளுக்கு டாடா நிறுவனம் டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர்  விருதை வழங்கி வருகிறது.  டாடா நிறுவனம் இந்திய இலக்கியத்தில் நீடித்த மற்றும் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் படைப்பாளிகளை அங்கீகரித்து இந்த விருதை வழங்கி வருகிறது. அந்த  வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான  இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை எழுத்தாளர் அம்பைக்கு  வழங்கி உள்ளது.

எழுத்தாளர் அம்பை 1944இல் கோவையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி ஆகும். இவர் பெங்களூருவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து பின்பு சென்னையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். அதன் பின்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இவர் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது  இவர் மும்பையில் வசித்து வருகிறார்.

எழுத்தாளர் அம்பை தொடர்ந்து  நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண்கள் வரலாறு,  மற்றும் வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். பெண்களைப் பற்றியும் குடும்பத்துக்குள் பெண்களின் இருப்புப் பற்றியும் சிலர் எழுதிக் கடந்த நிலையில் எழுத்தாளர் அம்பையின் பார்வை வேறு   மற்றும்  கோணம் வேறு ஆகும். எழுத்தாளர் அம்பையின் எழுத்துகள் சமூகக் கருத்துகள் நிறைந்த எழுத்து என்கிற முத்திரை எதையும் காட்டாமல், கதைக்குள்ளும் அதைக் கட்டமைக்கும் மற்றும் சொற்களுக்குள்ளும் அந்த வித்தையை நேர்த்தியாக செயல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் அம்பை 1988-இல் ஸ்பாரோ என்னும் பெண்கள் ஆவணக் காப்பகத்தை மும்பையில் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். எழுத்தாளர் அம்பை எழுதியுள்ள  சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் வற்றும் ஏரியின் மீன்கள், ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு, அந்தேரி, மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு  சிறந்த சிறுகதைத் தொகுப்புகள் ஆகும்.

எழுத்தாளர் அம்பை இதுவரை  புதுமைப்பித்தன் விருது, டொராண்டோ பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது, கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி, சாகித்ய அகாதெமி போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த 2021-ல்  அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் அம்பை,”இந்த Tata Literature Lifetime Achievement Award விருதுக்கு தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி  அடைகிறேன். ” என தெரிவித்துள்ளார்

Latest Slideshows

Leave a Reply