Tata Motors invest Rs.9,000 crore in Tamil Nadu: வாகன தொழிற்சாலைக்கான  ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது

தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்

தற்போது  தமிழ்நாடு  இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வருகிறது.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக விரைவில் உயர்த்திட வேண்டும் என்ற இலக்கோடு தமிழ்நாடு அரசின் தொழில்துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், அவர் அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும் (capital intensive high-tech Industries), மற்றும் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் (Employment intensive Industries) ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஆனது மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆனது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tata Motors invest Rs.9,000 crore in Tamil Nadu.

டாடா மோட்டார்ஸ் ஆனது தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி முதலீட்டில் வாகன உற்பத்தி தொழிற்சாலை தொடங்குகிறது. TATA மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த திட்டத்தை தீட்டியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது , முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு, மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் P.B.பாலாஜி ஆகியோரிடையே மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  டாடா மோட்டார்ஸ் குழும தலைமை நிதி அலுவலர் பி.பி.பாலாஜி, மற்றும் தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு ஆகியோர் பரிமாறிக் கொண்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் SIPCOT மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ், தொழில் துறை அமைச்சர் TRB ராஜா, மற்றும் துறை செயலர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கி.செந்தில்ராஜ் மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொழில் துறை அமைச்சர் TRB ராஜா உரை

தொழில் துறை அமைச்சர் TRB ராஜா செய்தியாளர்களிடம், முதல்முறையாக தமிழக வரலாற்றில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் 2 மாத இடைவெளியில் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளன. முதலீட்டாளர் மாநாட்டில்  வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் தொழிற்சாலை நிறுவ ஒப்பந்தம் செய்ததை தொடர்ந்து, தமிழகத்தில் முதல்முறையாக டாடா நிறுவனத்தின் பசுமை வாகன உற்பத்தி ஆலையைரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில்அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. TATA  நிறுவனம் ஆனது அடு்த்த சில மாதங்களில் தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்குகிறது. இந்த TATA நிறுவனத்துக்கு சுமார் 500 ஏக்கர் நிலம் ஆனது ஒதுக்கப்பட்டுள்ளது. TATA நிறுவனம் ஆனது தமிழக அரசின் சலுகைகளை எதிர்பார்க்காமல், தமிழகத்தில் உள்ள திறன்வாய்ந்த மனிதவளம், மற்றும் உகந்த சூழல் ஆகியவற்றுக்காகவே வருகின்றது. TATA போன்ற பெரிய நிறுவனங்களுக்கு தமிழகத்தில் மட்டும்தான் அதிக திறன் பெற்ற மனித வளம் ஆனது கிடைக்கிறது.

இது போன்று இன்னும் பல பெரிய நிறுவனங்கள் விரைவில் தமிழகத்தில் முதலீடு செய்ய வர உள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த 2024 ஆம் ஆண்டின் இதுநாள் வரை ரூ.10 லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஆனது பெறப்பட்டுள்ளன மற்றும் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் ஆனது உருவாக்கப்பட்டுள்ளன. எனவே   முதலீடுகளைவிட தமிழக அரசு ஆனது  பெரிய அளவிலான வேலைவாய்ப்பை நோக்கித்தான் செயல்படுகிறது என்று கூறினார்.

Latest Slideshows

Leave a Reply