Tata Motors Plant Foundation Ceremony: 9,000Cr மதிப்பிலான டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

இந்தியாவின் முன்னணி வர்த்தக மற்றும் பயணிகள் வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம்  தமிழகத்தில் தனது புதிய, உலகத் தரம் வாய்ந்த கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவை 28/09/2024 அன்று நடத்தியது.

சென்னையில் இருந்து சுமார் 115 கி.மீ தொலைவில் உள்ள தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கத்தில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த கிரீன்ஃபீல்ட் உற்பத்தி நிலையத்தில் டாடா மோட்டார்ஸ் குழுமம் ஆனது Rs. 9,000 கோடிகளை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி இந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு அடுத்த ஜென் வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் JLR க்கு அடுத்த தலைமுறை வாகனங்களை Tata Motors உற்பத்தி செய்யும்.

இந்த சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட புதிய உற்பத்தி ஆலை ஆனது இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் JLR க்கு அடுத்த தலைமுறை வாகனங்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும்.

இந்த புதிய உற்பத்தி ஆலை உற்பத்தி ஆண்டுக்கு 2,50,000 வாகனங்களாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திறனை அடுத்து வருகின்ற 5-7 ஆண்டுகளில் எட்டுவதற்கு படிப்படியாக உற்பத்தியை தொடங்க உள்ளது. வியக்கத்தக்க திறன்-வளர்ச்சியுடன் 5,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

Tata Motors Plant Foundation Ceremony தமிழக முதல்வர் உரை

தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், “கடந்த பல ஆண்டுகளாக நமது மாநிலத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் டாடா குழுமம் இந்திய தேசத்தைக் கட்டியெழுப்புவதில் புகழ்பெற்று விளங்குகிறது. டாடா குழுமம் தமிழ்நாட்டுடன் ஆழமான, வரலாற்று உறவைக் கொண்டுள்ளது. 5,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை (நேரடியாகவும் மறைமுகமாகவும்) உருவாக்கும் திறனைக் கொண்டுள்ள இந்த புதிய உற்பத்தி ஆலையை நிறுவுவதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறினார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் உரை

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், “நாங்கள் அடுத்த தலைமுறை கார்கள் மற்றும் SUV-கள், எலக்ட்ரிக் மற்றும் சொகுசு வாகனங்கள் உள்ளிட்டவற்றின் தாயகமாக பனப்பாக்கத்தை மாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அதிநவீன உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த நிலைத்தன்மை நடைமுறைகளைப் பயன்படுத்த உள்ளோம். இந்த புதிய உற்பத்தி ஆலையில்  பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், அனைத்து நிலைகளிலும் பெண் ஊழியர்களின் அதிக பங்கைக் கொண்டிருப்பதே எங்கள் முயற்சியாக இருக்கும்” என்று கூறினார்.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் டாடா சன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், டாடா குழுமத்தின் பிரதிநிதிகள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், மூத்த அதிகாரிகள், அரசு அதிகாரிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Latest Slideshows

Leave a Reply