சூரிநோவா நிறுவனம் Tea Picking T-Rover Robot-ஐ உருவாக்கி உள்ளது

Tea Picking T-Rover Robot :

உலகிலேயே முதன்முறையாக விவசாயப் பணிக்கு உதவும் வகையில் சிறிய ரக தேயிலை பறிக்கும் T-Rover என்கிற ரோபோவை சூரிநோவா நிறுவனம் உருவாக்கி உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் மற்றும் இன்றைய தலைமுறையில் விவசாயப் பணிக்கு போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை. கணினி தொழில்நுட்பம், மேப்பிங், இமேஜ் கேப்சரிங், செயற்கை நுண்ணறிவு போன்ற பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மூன்று வருடமாக ஆராய்ச்சிகள் செய்து மற்றும் பலவிதமான மேம்பாட்டிற்குப் பிறகு இந்த ரோவர் ஆனது உருவாக்கப்பட்டு சந்தையில் அறிமுகம் (Tea Picking T-Rover Robot) செய்யப்பட்டுள்ளது.

இந்த ரோவர் 25 பேர் செய்யக்கூடிய வேலையை ஒரே நேரத்தில் செய்து முடிக்கும் சக்தி கொண்டுள்ளது. இந்த ரோவர் ஆனது வெயில், மழை என எல்லா வகையான வானிலைகளிலும் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோவர் பேட்டரியை 6 மணி நேரம் சார்ஜ் செய்தால் மட்டும் போதும் பேட்டரியில் இருக்கும் சக்தியை கொண்டு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். தற்போது ஜாய் ஸ்டிக் வைத்து ஆபரேட் செய்யும் விதத்தில் ரோவர் (Tea Picking T-Rover Robot) ஆனது வடிவமைக்கப்பட்டு உள்ளது. தேயிலை தோட்டங்கள் இருக்கும் நிலப்பரப்பிற்கு ஏற்ப பாதையை திட்டமிட்டு இந்த ரோவர் ஆனது அதற்கேற்ப செயல்படும்.

அதேபோல, இந்த ரோவர் 360 டிகிரியில் சுழன்று செயல்படும். வால்பாறை, மூணாறு மற்றும் அசாமில் 6 இடங்களில் T-Rover பராமரிப்பு மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் ஆயிரம், 500 ஏக்கர் என்று அதிக அளவில் மேற்கத்திய நாடுகளில் இருப்பதனால் அதற்கேற்ப பெரிய இயந்திரங்கள் ஆனது அங்கே மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் விவசாயிகள் அதிகபட்சமாக 2 முதல் 10 ஏக்கர் என்கிற அளவிலேயே விவசாய நிலங்களை வைத்துள்ளனர். அதனால் இந்தியாவில் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தும் இயந்திரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவது பொருத்தம் இல்லாததாக இருக்கும்.

இந்த ஒரு T-Rover-ரின் விலை (Tea Picking T-Rover Robot) ரூ.30 லட்சம் ஆகும். தற்போது தமிழகத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ள வால்பாறையில் 2 T-Rover-கள் ஆனது பயன்பாட்டில் இருக்கிறது. இது  தவிர இந்தியாவில் 25 T-Rover-கள் தயாரிக்க அனுமதி வாங்கப்பட்டு பயன்படுத்த தயார் நிலையில் உள்ளன. மேலும் சுமார் 200க்கும் மேற்பட்ட T-Rover-கள் தயாரிக்க இலங்கை, கென்யா மற்றும் டான்சானியா உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்தும் Order-கள் பெறப்பட்டுள்ளன. T-Rover தேவைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது தேயிலையை மட்டுமே பறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள T-Rover-ன் அடுத்தகட்ட முன்னேற்றமாக ரோவரே களையை பிடுங்குவது மற்றும் மருந்து தெளிப்பது போன்ற பணிகளை செய்யும் விதத்தில் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply