Teacher's Day 2024 : ஆசிரியர் தின வரலாறும் முக்கியத்துவமும்

நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆசிரியரின் பங்கு மிகப்பெரியது. ஆசிரியர்கள் மாணவர்களின் தவறுகளை சரிசெய்து அவர்களின் வாழ்க்கையை சரியான பாதையில் வழி நடத்துகிறார்கள். அதனால் தான் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் வழங்கப்படுகிறது. அதுவே ஆசிரியர் தினம் ஆகும். இது உலகின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் (Teacher’s Day 2024) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆசிரியர்களின் பணி மற்றும் முக்கியத்துவத்திற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினம் எப்போது தொடங்கியது மற்றும் இந்த நாளின் முக்கியத்துவம் என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் :

டாக்டர் ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5, 1888 இல் பிறந்தார். மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவம் பயின்றார். பின்னர் மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். இவரது சிறப்பான பணியின் காரணமாக ஆந்திரா, டெல்லி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழங்கள் ஆகியவற்றின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இவர் தனது வாழ்க்கையில் பல விருதுகள் மற்றும் சாதனைகளை வென்றுள்ளார்.

Teacher's Day 2024 - ஆசிரியர் தின வரலாறு :

1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும் இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்தநாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆசிரியர் தினம் என்பது முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளாகும். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சிறந்த அறிஞரும் ஆசிரியரும் ஆவார். ஒரு அரசியல்வாதி மற்றும் மதிப்புமிக்க பாரத ரத்னா விருது பெற்றவர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாட அனைத்து மாணவர்களும் தயாராகி விட்டதால், ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் எனது பிறந்தநாளுக்குப் பதிலாக செப்டம்பர் 5 ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும். அந்த நாளே ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் முதல் ஆசிரியர் தினம் செப்டம்பர் 5, 1962 அன்று கொண்டாடப்பட்டது. மேலும், அதே ஆண்டில் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக பதவியேற்றார். 1962 முதல் 1967 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்குப் பிறகு இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் ஆவார். 1965 ஆம் ஆண்டில், அவரது பிறந்தநாளைக் கொண்டாட அவரது மாணவர்களும், நண்பர்களும் அவரை அணுகினர். தனது பிறந்த நாளைக் கொண்டாடாமல், அனைத்து ஆசிரியர்களையும் கவுரவிக்கும் வகையில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆசிரியர் தின முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம் :

ஒரு ஆசிரியர் நம் கைகளைப் பிடித்து, நம் தவறுகளைச் சரிசெய்து, நம்மை சிறந்த குடிமக்களாக மாற்றும் ஒரு தத்துவஞானி மற்றும் வழிகாட்டி ஆவார். வாழ்க்கையில் ஆசிரியரின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. ஆசிரியர் தினமானது பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை கெளரவித்து மகிழும் சிறப்பு நாளாகும். இது கல்வி நிறுவனங்களில் சிறப்பாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்படுகிறது. அன்பான ஆசிரியரை சிறப்படையச் செய்ய சிறப்பு நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் விரிவான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த நாளில் (Teacher’s Day 2024) மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி மகிழ்வார்கள்.

Latest Slideshows

Leave a Reply