TEAL Program : தமிழக கிராமப்புற மாணவர்கள் மேம்பட உதவும் திட்டம்
Teal Program என்பது Technology-Enabled Active Learning Program ஆகும். அதாவது தொழில்நுட்பம் சார்ந்த செயலில் கற்றல் ஆகும். Teal Program ஆனது ஒரு சிறந்த கூட்டு கற்றல் அனுபவத்தை உருவாக்க விரிவுரைகள் (Lectures), உருவகப்படுத்துதல்கள் (Simulations) மற்றும் டெஸ்க்டாப் சோதனைகளை (Hands-On DesktopExperiments) ஒன்றிணைக்கும் ஒரு கற்பித்தல் வடிவம் (Teaching Format) ஆகும். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது (Tamil Nadu School Education Department), கிராமப்புற மாணவர்கள் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளைக் கற்கும் வாய்ப்பை பெறும் வகையில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றல் ஆதரவு (TEALS) திட்டத்தை செயல்படுத்த மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் (Software Major Microsoft) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU – Memorandum Of Understanding) கையெழுத்திட்டுள்ளது.
இந்த MoU ஒப்பந்தத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரிகளும் மற்றும் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் அதிகாரிகளும் கையெழுத்திட்டு உள்ளனர். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இந்த Teal Program ஆனது அரசு பள்ளி மாணவர்களிடையே STEM (Science, Technology, Engineering And Mathematics-அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வியை மேம்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும்” என்று கூறினார். இந்த Teal Program திட்டத்திற்காக பல மாநிலங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கூட்டு சேர விரும்பின. ஆனால், முதல்வரின் ஊக்கத்தால் தமிழ்நாடு ஆனது பெற்றுள்ளது.
Teal Program - Microsoft கிராமப்புற குழந்தைகளுக்கு தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்து பயிற்சியளிக்கிறது :
TEAL Program ஆனது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திர கற்றல் (Machine Learning) மற்றும் ரோபாட்டிக்ஸ் (Robotics) உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களை கிராமப்புற மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பை இத்திட்டம் வழங்கும். தமிழ்நாட்டில் 13 பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 3,800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEAL Program ஆனது செயல்படுத்தப்படும்.
Data And AI Solutions And Strategy (US Manufacturing) Microsoft Director Cecil Sunder, “வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழக கிராமப்புற மாணவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களை அணுகவும், உலகளாவிய வாய்ப்புகள் பெறவும் மற்றும் தொழில் பாதைகளைத் திறக்கவும் இந்த ஒப்பந்தம் ஆனது உதவும்” என்று கூறினார். Microsoft ஆனது பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது மற்றும் Microsoft ஆனது ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றது. இப்போது மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு Microsoft, Cognizant மற்றும் Code.org இன் நிர்வாகிகள், சமீபத்திய கணினி நிரல் பற்றிய அறிவை வழங்குவதற்காக செல்வார்கள்.
Latest Slideshows
- விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்