டெக்னோ நிறுவனம் Tecno Pova 6 Neo 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் நேற்று Tecno Pova 6 Neo 5G ஸ்மார்ட்போனை குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

டெக்னோ போவா 6 நியோ 5ஜி சிறப்பம்சங்கள் (Tecno Pova 6 Neo 5G Specifications) :

  1. Tecno Pova 6 Neo 5G Display : இந்த டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் ஆக்டோ கோர் மீடியாடெக் டைனம்சிட்டி 6300 6nm சிப்செட் வசதியுடன் இந்த டெக்னோ போவா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.

  2. Tecno Pova 6 Neo 5G Camera : இந்த டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போனில் 108MB பிரைமரி கேமரா + AI லென்ஸ் கேமரா என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் தனியே 8MB கேமரா இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக இந்த டெக்னோ போவா போன் ஏஐ மேஜிக் எரேசர் (AI Magic Eraser) அம்சத்துடன் வெளிவந்துள்ளது.

  3. Tecno Pova 6 Neo 5G Storage : இந்த டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் 6GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 1TB வரை மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

  4. Tecno Pova 6 Neo 5G Battery : 5000mAh பேட்டரி வசதியுடன் இந்த டெக்னோ போவா 6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த Tecno Pova 6 Neo 5G போனை விரைவாக சார்ஜ் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

  5. Tecno Pova 6 Neo 5G Rate : 6GB RAM கொண்ட டெக்னோ போவா 6 நியோ 5ஜி போனின் விலை ரூ.13,999 ஆகவும், இதன் 8GB வேரியண்ட் விலை ரூ.14,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply