அரியலூரில் ரூ1000 கோடி முதலீட்டில் தைவானின் Teen Shoes நிறுவனம்

இந்தியாவில் தமிழ்நாடு ஆனது காலணி தயாரிப்பிலும் மற்றும் ஏற்றுமதியிலும் முக்கிய இடம் வகித்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது இடம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. Teen Shoes  தைவானை  தலைமையிடமாகக் கொண்ட காலணி உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் ரூ1000 கோடி மதிப்பிலான புதிய காலணி தயாரிக்கும் தொழிற்சாலை ஆனது அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.

Teen Shoes தொழிற்சாலை தொடக்கம்

இந்த புதிய தொழிற்சாலையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த காலணிகளை தயாரிக்க Teen Shoes திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் காலணித் தொழில் ஆனது மேலும் நல்ல வளர்ச்சியை அடையும். இந்த புதிய தொழிற்சாலை அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளதால் இந்த மாவட்டம் தொழில்துறையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். தமிழ் மாநிலத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கும். அரியலூர் மாவட்டத்தில் சுமார் 15000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே தமிழ்நாடு ஆனது உலகின் பல முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் ரூ1000 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலை தொடக்கம் ஆனது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இத்துறைக்கும் ஒரு புதிய வேகத்தை கொடுக்கும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தனது உரையில் Teen Shoes அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாடு உற்பத்தித் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான விருப்பமான இடமாக வளர்ந்து வருவதை காட்டுகிறது. இந்த புதிய தொழிற்சாலையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும் என்றும் மேலும் தமிழ் மாநிலத்தின் உற்பத்தித் துறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் நமது 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்த வேண்டும் என்றார். புதிய தொழிற்சாலை இத்துறைக்கு புதிய வேகத்தை கொடுக்கும் என்று தனது உரையில் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply