Tejas Fighter Jet Trial Successful : தேஜஸ் போர் விமானத்தின் சோதனை முயற்சி வெற்றி!

Tejas Fighter Jet Trial Successful :

Tejas Fighter Jet Trial Successful : கண்ணுக்கு தெரியாத வெகு தொலைவில் உள்ள இலக்கை, மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் “அஸ்த்ரா ஏவுகணை” வாயிலாக நேற்று நடந்த “தேஜஸ்” போர் விமானத்தின் சோதனை முயற்சியானது (Tejas Fighter Jet Trial Successful) வெற்றிகரமாக நடந்துள்ளது.

இந்த தேஜஸ் போர் விமானதின் பாகங்கள் முழுவதும் இந்தியாவில் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு, தேஜஸ் என பெயரிடப்பட்டுள்ள இலகு ரக போர் விமானம், கடந்த சில மாதங்களாக பல்வேறு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடுத்தகட்டமாக, கண்ணுக்கு தெரியாத தொலைவில் இருக்கும் எதிரி நாட்டின் விமானங்களை தாக்கி அழிக்கும், அஸ்த்ரா ஏவுகணையின் வாயிலாக சோதனை முயற்சி நேற்று நடந்தது.

கோவா கடற்கரைக்கு அருகே,கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் பறந்த தேஜஸ் போர் விமானம், திட்டமிட்டபடி அதன் இலக்கை துல்லியமாக தாக்கியது.

விமானவியல் மேம்பாட்டு முகமை உள்ளிட்ட உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்த சோதனை (Tejas Fighter Jet Trial Successful) வெற்றி கரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த சோதனை முயற்சியானது வெற்றிகரமாக முடிந்ததற்கு, நம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சியானது தேஜஸ் போர் விமானத்தின் திறனை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும், நம் இந்திய நாடானது ஏவுகணை உள்ளிட்ட அணு ஆயுதங்களுக்கு வெளிநாடுகளை பெரிதும் சார்ந்திருந்தது. ஆனால் இப்பொழுது நம்மால் உள்நாட்டிலேயே உருவாக்க முடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது. என, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply