Temporary Ban On VGP Amusement Park : விஜிபி பொழுதுபோக்கு பூங்காவிற்கு தற்காலிக தடை

விஜிபி பூங்காவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராட்டினத்தல் 36 பேர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பூங்காவிற்கு திறக்க (Temporary Ban On VGP Amusement Park) தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஜிபி பொழுதுபோக்கு பூங்கா

விஜிபி பூங்காவனது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபலமான பூங்காவாகும். இது East Coast Road (ECR) இல், கடற்கரை அருகே அமைந்துள்ளது, மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொழுதுபோக்குக்கான பரந்த அளவிலான சவாரிகள் மற்றும் அம்சங்களை வழங்குகிறது. இந்த பூங்காவில் 100-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன. இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ₹600 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விடவும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

ராட்டினத்தில் சிக்கிய 36 பேர்

அந்த வகையில், செவ்வாய்க்கிழமை மாலையில் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். பலர் சாகச சவாரிகளில் தங்களை மகிழ்வித்துள்ளனர். அப்போது, பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உட்பட 36 பேர் ரோலர் கோஸ்டரில் சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது, ரோலர் கோஸ்டரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென சுமார் 150 அடி உயரத்தில் நின்றது. அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள் பயத்தில் அலறினர். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிக் கொண்டதால், பெண்களும் குழந்தைகளும் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து விஜிபி பூங்காவின் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தது. இதனையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, 36 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Temporary Ban On VGP Amusement Park - Platform Tamil

பூங்கா திறப்பதற்கு தற்காலிக தடை (Temporary Ban On VGP Amusement Park)

விபத்தில் சிக்கியவர்கள் பயந்துவிட்டதாக தெரிவித்தனர். அனைவரும் காயமின்றி மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள விஜிபி பூங்காவை திறக்க காவல்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, விளக்கம் அளித்து ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு பூங்காவை திறக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply