Temporary Captain KL Rahul : ரோகித் சர்மா இல்லாதபோது பொறுப்பு கேப்டன் ஆன கே.எல் ராகுல்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டியின் போது, ​​கே.எல்.ராகுல் திடீரென மூன்று ஓவர்களுக்கு கேப்டன் பொறுப்பை (Temporary Captain KL Rahul) ஏற்றார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10வது ஓவருக்குப் பிறகு அவரது கையைப் பிடித்துக்கொண்டு அவசரமாக வெளியேறினார். பின்னர் 13வது ஓவருக்கு பிறகு களத்திற்கு வந்தார். அதுவரை கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை (Temporary Captain K.L.Rahul) ஏற்று அணியை வழிநடத்தினார்.

இந்த ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வில் யங் 27 பந்துகளைச் சந்தித்து 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் 10 வது ஓவரின் போது பீல்டிங் செய்யும் போது ரோகித் சர்மாவின் விரல்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து 10 வது ஓவரின் முடிவில் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Temporary Captain KL Rahul :

ரோகித் சர்மா இல்லாததால் கே.எல் ராகுல் கேப்டனாக (Temporary Captain KL Rahul) பொறுப்பேற்றார். உலக கோப்பை தொடரின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா உள்ளார். எனினும், காயம் காரணமாக அவர் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த கே.எல்.ராகுல் கேப்டனாக (Temporary Captain KL Rahul) செயல்பட்டார். மேலும் முன்னாள் கேப்டன் விராட் கோலியை தற்காலிக கேப்டனாக தக்கவைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் சிலர் கூறியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அந்த மூன்று ஓவர்களில் ஜடேஜா கேட்சை நழுவ விட்டதைத் தவிர வேறு எதுவும் குறிப்பிடத்தக்கதாக நடக்கவில்லை. எனவே, கே.எல்.ராகுல் கேப்டன் என்பது குறித்து வேறு எந்த விமர்சனமும் எழவில்லை. முன்னதாக நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை சிராஜ் மற்றும் ஷமி வீழ்த்தினர். ஆனால், அதன் பிறகு ரச்சின் ரவீந்திரன் அபாரமாக விளையாடி போட்டியை கையில் எடுத்தார்.

Latest Slideshows

Leave a Reply