Temporary Suspension Of Online Patta Service : ஆன்லைன் பட்டா சேவை தற்காலிகமாக நிறுத்தம் இயக்குநர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் தமிழ் நிலம் (Tamil Nilam) இணையதளம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை எங்கிருந்தும் எந்த நேரத்திலும் அறிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில் தமிழ் நிலம் மென்பொருளில் தற்போது தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ஆன்லைன் பட்டா வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக (Temporary Suspension Of Online Patta Service) நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் இன்று அறிவித்துள்ளார்.

தமிழ் நிலம் இணையதளம்

தமிழகத்தில் பொதுமக்கள் பட்டா விவரங்கள் பற்றி அறியவும், புதிய பட்டா பெறுவதற்கு விண்ணப்பிக்கவும் அரசின் சாா்பில் தமிழ் நிலம் செயலி கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை தமிழக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை வழி நடத்தி (Temporary Suspension Of Online Patta Service) வருகிறது. மேலும் இந்த இணையதளத்தின் மூலம் மக்கள் எந்த நேரத்திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம். இதுமட்டுமல்லாமல் நிலங்களை அளவீடு செய்தல், குறித்த நேரத்தில் பட்டா மற்றும் சிட்டாவை பாா்வையிடலாம். மேலும் நகர நில அளவை வரைபடங்கள், அரசு புறம்போக்கு நில விவரங்கள், புலப்படம் போன்ற சேவைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என பல வசதிகள் இந்த தமிழ் நிலம் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.           

மேலும் தமிழ் நிலம் இணையதளத்தின் மூலம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பூங்காக்கள், சாலைகள் ஆகியவற்றை தனித்தனியாக உட்பிரிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றப்படுகிறது. மேலும் பொது பயன்பாட்டு நிலங்களை மறைமுகமாக விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தமிழ் நிலம் இணையதளத்தில் புதிய அப்டேட் ஒன்றை மேம்படுத்தவுள்ளதால் இணையவழி பட்டா வழங்கும் சேவை (Temporary Suspension Of Online Patta Service) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பட்டா சேவை தற்காலிகமாக நிறுத்தம் (Temporary Suspension Of Online Patta Service)

இது தொடர்பாக தமிழக நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் திரு.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆன்லைன் வழி பட்டா மாறுதல் சேவையான தமிழ் நிலம் மென்பொருளில் தற்போது விவசாயிகள் விவர பதிவேடு (Farmer Registry) தொடர்பான தொழில்நுட்பப் பணிகள் நடைபெற உள்ளதால் இன்று 28.12.2024 முதல் 31.12.2024 தேதி வரை ஆன்லைன் பட்டா சேவை மேற்கொள்ளும் தமிழ் நிலம் இணையதளம் (Temporary Suspension Of Online Patta Service) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply