Tender Coconut Water In Tamil: இளநீர் குடிப்பதால் ஏற்படும் 10 நன்மைகள்!

இளநீர் என்பது பச்சை நிற இளமையான தேங்காய்களில் இருந்து கிடைக்கும் தெளிந்த நீரை குறிக்கிறது. பொதுவாக தேங்காய்கள் விளைந்த ஓராண்டுக்குள் அறுவடை செய்யப்படும். இளநீர் காய்கள் தோன்றி 5-7 மாதங்களுக்குப் பிறகு வெட்டப்படுகின்றன. அப்போதுதான் இக்காய்கள் அதிக நீரினை கொண்டிருக்கும். இளம் தேங்காயில் இருந்து கிடைக்கும் நீரை இளநீர் என்றும் பின்னர் மருவி இளநீர் என்றும் கூறுவர். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாகத்தைத் தணிக்கும் தன்மை ஆகியவற்றால் இது ஒரு இயற்கை விளையாட்டு பானம் மற்றும் வாழ்க்கை மேம்பாட்டாளர் என்றெல்லாம் ஆழைக்கப்படுகிறது. இளநீரானது தென்னை மரத்தில் இருந்து இடைக்கிறது. தற்போது இளநீரை பருகுவதால் ஏற்படும் நன்மை காணலாம்.

Top 10 Tender Coconut Water Benefits:-

இரத்த அழுத்தத்தை சீராக்க

இளநீரில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீராக வெளியேற்றி இரத்த அழுத்தத்தை சீராக்கும். மேலும் இதில் உள்ள அர்ஜினைன் என்ற அமினோ அமிலமானது இரத்த நாளங்களை சீராக்கி சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி வழிவகுக்கிறது. இதனால் இரத்த அழுத்தமானது சீராகிறது. எனவே இளநீரினை குடித்து இரத்த அழுத்தத்தைச் சீராக்கலாம்.

கல்லீரலைப் பாதுகாக்க

கல்லீரலினை பாதுகாக்க இளநீரில் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. கல்லீரலினில் உள்ள நச்சுக்கழிவுகளை, இளநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் கல்லிரலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.

சரும பராமரிப்பு

இளநீரில் சைட்டோகைனின் என்ற தவர ஹார்மோன் உள்ளது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தினால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினால் உண்டாகும் சருமச்சுருக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சைட்டோகைனின் புற்றுச்செல்கள் உருவாவதையும் தடை செய்கிறது.மேலும் வடுகள், பருக்கள் மீது இளநீரினை பூசும்போது அவை விரைவில் மறைந்து விடுகிறது. இளநீரானது சருமத்தை வறண்டுவிடாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், மேலும் சருமத்தில் எண்ணெய் படியவிடாமலும் பாதுகாக்கிறது.

தசைப்பிடிப்பு

கால்சியமானது சீரான தசை தளர்வினை உருவாக்குகிறது. போதுமான அளவு கால்சியம் உள்ள உணவினை உண்ணும் போது இதய தசைகள் மற்றும் உடலில் உள்ள எல்லா வகையான தசைகள் பிடிப்புகள் இல்லாமல் தளர்வாக இருக்கும். எனவே மெக்னீசியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள இளநீரினை அருந்தும் போது தசைப் பிடிப்புகள் இல்லாமல் தளர்வாக வைப்பதுடன், மனதிற்கு அமைதியை கொடுக்கிறது.

எலும்புகளின் ஆரோக்கியம்

இளநீரில் உள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. இவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

நல்ல செரிமானம்

இளநீரில் உள்ள நார்ச்சத்தானது உணவை எளிதில் செரிக்க வைக்கிறது. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்ற செரிமான பிரச்சனைகளின் போது இளநீரை உட்கொள்ளலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.ஏனெனில் இதில் உள்ள தாதுக்கள் செரிமான கோளாறுகளால் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்கிறது. இளநீரானது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு உணவினை நன்கு செரிக்க வைக்கிறது.

வளர்ச்சிதை மாற்றத்தினை மேம்படுத்த

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் போது கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளில் இருந்து முழுமையான ஆற்றலைப் பெற மாங்கனீசு என்ற தாது தேவைப்படுகிறது. இளநீரில் அதிக மாங்கனீசு காணப்படுவதால், இளநீரை அருந்தும் போது நமக்கு முழுமையான ஆற்றல் கிடைத்து வளர்ச்சிதை மாற்றம் நடைபெறுகிறது.

நீர்ச்சத்தினை உடலுக்கு அளித்தல்

இளநீரானது உடனடியாக உட்கிரக்கிக்கப்படும் தன்மையை கொண்டுள்ளது. எனவே இது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை எளிதில் வழங்குகிறது. மேலும், இளநீரில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை மின்பகுளியாக செயல்பட்டு உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவினை சரியான அளவில் சமநிலைபடுத்துகிறது. நாம் வெயிலில் சென்றுவிட்டு நாம் இளநீரை அருந்தும் போது நம்மை விட்டு நீங்கிய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றை திரும்ப பெற்று புத்துணர்ச்சியை அளிக்கிறது. எனவே நீரிழப்பினால் அவதி படுபவர்கள் இளநீரை குடித்து நல்ல தீர்வினை பெறலாம்.

Latest Slideshows

Leave a Reply