Thalaivai 171 Update : தலைவர் 171 படம் குறித்து லோகேஷ் கனகராஜ்

Thalaivai 171 Update :

ரஜினியின் 171வது படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி அடைவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த மாதம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில் மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, யோகி பாபு என தென்னிந்திய முன்னணி நடிகர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களை வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ரூ.675 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், ‘தலைவர் 170’ படத்தை த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thalaivai 171 Update: தற்போது ரஜினியின் 171வது படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தலைவர் 171’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தை ஜெயிலர் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க விக்ரமிடம் பணியாற்றிய அன்பறிவு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ‘தலைவர் 171‘ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் தளத்தில் ‘தலைவர் ரஜினியுடன் கைகோர்த்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டு அனிருத், அன்பறிவு மற்றும் சன்பிக்சர்ஸ் எக்ஸ் பக்கத்தை டேக் (Thalaivai 171 Update) செய்துள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply