Thalaivar 170th Movie : தலைவர் 170 படத்தின் பூஜை எப்போ தெரியுமா?

ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அடுத்த நிகழ்வாக (Thalaivar 170th Movie) படத்தின் பூஜையை இந்த மாதம் செய்ய ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெய்பீம் படத்தை இயக்கி உலகையே தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ளார். இப்படத்தில் யார் நடிக்கப் போகிறார்கள், எந்த தேதியில் படத்தின் பூஜை எங்கு நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இவற்றை பற்றி காணலாம்.

டைனோசர் வேட்டை :

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்தை டைனோசராக அவரது மகனாக நடித்த வசந்த் ரவியின் டயலாக் இடம்பெற்றிருக்கும். சலார் படத்தில் பிரபாஸ் டைனோசராக வருவதற்கு முன்பே ரஜினிகாந்த் ஜெயிலரில் டைனோசராக மாறிவிட்டார். ஜெயிலர் 2 வாரங்களை முடிந்து 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது, இப்படம் 500 கோடியை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Thalaivar 170th Movie :

Thalaivar 170th Movie: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் என்கவுன்ட்டருக்கு எதிரான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், சர்வானந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க வாய்ப்புகள் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் பூஜையானது வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக அதிரடி தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அடுத்த மாதம் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் (Thalaivar 170th Movie) படத்தின் சூட்டிங் தொடங்கும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் திரைப்படம் மாஸ் கமர்ஷியல் படமாக இருந்த நிலையில், ஜெய்பீம் திரைப்படம் போல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து விருதுகளை குவிக்கும் படமாக Thalaivar 170th Movie இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply