Thalaivar 171 Movie Latest Update : தலைவர் 171 படத்தில் இணையும் ரன்வீர் சிங்

ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தலைவர் 171’ திரைப்படம் பற்றி சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோலிவுட் திரையுலகமே வியக்கும் அளவுக்கு இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘தலைவர் 171’ படம் குறித்து மிரட்டல் தகவல் (Thalaivar 171 Movie Latest Update) வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் அதிரடி ஆக்ஷனில் மிரட்டினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரேமுக்கு பிரேம் சூப்பர் ஸ்டாரை இப்படத்தில் ரசிகர்கள் கொண்டாடினர். ‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு, ரஜினி தனது அடுத்த படைப்புகளை பிளாக்பஸ்டர் ஹிட் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் ரஜினியும், லோகேஷ் கனகராஜும் எதிர்பாராத விதமாக ஜோடி சேர்ந்துள்ளனர். இதுவரை ஒரு பிளாப் படம் கூட கொடுக்காத ஹிட் இயக்குனராக லோகேஷ் கமல், விஜய்யை வைத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், ‘தலைவர் 171’ படத்தின் மூலம் ரஜினியுடன் முதன்முறையாக இணைந்துள்ளார்.

Thalaivar 171 Movie Latest Update - தலைவர் 171-இல் ரன்வீர் சிங் :

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகயுள்ள இப்படத்தின் மிரட்டலான போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த போஸ்டரில் மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் காட்சியளிக்கும் ரஜினி, கை முழுவதும் விலங்கு போன்ற வாட்ச் கட்டிருப்பதைப் போல் அமைக்கப்பட்டிருந்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த கொல மாசான போஸ்டரை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் மிரட்டலான தகவல் (Thalaivar 171 Movie Latest Update) ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் “ரன்வீர் சிங்” முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக தகவல் (Thalaivar 171 Movie Latest Update) வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டும் நடந்தால் பாலிவுட்டில் ‘தலைவர் 171’ படம் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெறும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, ‘தலைவர் 171’ படம் 100 சதவீதம் தனது பாணியில் இருப்பதாகவும், இதுவரை பார்த்திராத ரஜினியை படத்தில் காட்டப் போவதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது வரும் 22 ஆம் தேதி வெளியாகவுள்ள படத்தின் டைட்டில் மற்றும் டீசரின் படப்பிடிப்பில் லோகேஷ் பிசியாக உள்ளார். கமலுக்கு ‘ஆரம்பிக்கலாமா’, விஜய்க்கு ‘பிளடி ஸ்வீட்’ போன்று டைட்டில் டீசரில் ரஜினி என்ன டயலாக்கைக் கொடுக்கப் போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply