Thalaivar 171 Movie Villain : ரஜினிக்கு வில்லனாகும் மைக் மோகன்

சினிமா வாய்ப்பு இல்லாமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் மைக் மோகன் விஜய் நடிக்கும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரஜினியின் 171வது படத்தில் நடிகர் மைக் மோகன் (Thalaivar 171 Movie Villain) வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர் 171

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவர். அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டை பயிற்சி அமைக்கிறார். லோகேஷ் இயக்க இருக்கும் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. முன்னதாக இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் ரஜினியின் கையில் ரோலக்ஸ் வாட்ச் கொண்ட கைவிலங்கு மாட்டியிருப்பது போல புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

Thalaivar 171 Movie Villain

நிச்சயமாக, இந்த படம் லோகேஷின் LCU எனப்படும் சினிமாட்டிக் யுனிவர்சில் ஒன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அனைவரின் பார்வையும் தலைவர் 171 படத்தின் மீதுதான் உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் மைக் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் (Thalaivar 171 Movie Villain) வெளியாகியுள்ளது. மேலும் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவில் 80s-களின் வெள்ளி விழா நாயகனாக கொண்டாடப்பட்டவர் நடிகர் மோகன்.

பெரும்பாலான படங்களில் மைக்குடன் தோன்றியதால் ரசிகர்களால் “மைக்” மோகன் என்று அழைக்கப்பட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன் விஜய் நடிக்கும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமான ‘வேட்டையன்’ அக்டோபர் மாதம் வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் வேட்டையன் படத்தில், அமிதாப் பச்சன், பஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply