Thalaivar 171 Title Promo : தலைவர் 171 டைட்டில் ப்ரோமோ ரெடி

ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்திற்குள் முடிவடையும் என கூறப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்தது. இதற்கிடையில், ஜூன் மாதம் தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார். இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ (Thalaivar 171 Title Promo) வரும் 22ம் தேதி வெளியாகும் என லோகேஷ் முன்பே அறிவித்துள்ள சூழலில் படத்திற்கு “கழுகு” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஒரே கேரக்டரில் வில்லனாகவும், ஹீரோவாகவும் தோன்றுவார் என்று கூறப்படும் சூழலில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வேட்டையன் :

ரஜினிகாந்த் நடித்துவரும் “வேட்டையன்” அக்டோபர் வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு தரப்பான லைகா புரொடக்‌ஷன்ஸ் நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடுக்கிவிட்டு அக்டோபர் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் ஜெயிலரும், கடந்த பிப்ரவரியில் வெளியான லால் சலாம் படமும் ரஜினிக்கு சிறப்பாக கை கொடுத்தது. குறிப்பாக ஜெயிலர் படம் ரூ.600 கோடி வசூல் சாதனையை கடந்துள்ளது. அதன் தொடர்ச்சியான லால் சலாம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் படத்தில் ரஜினிகாந்தின் மொய்தீன் பாய் கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், போலி என்கவுன்டருக்கு எதிரான கதையாக இப்படத்தின் கதைக்களம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார். மேலும் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜூன் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171 என்ற படத்தில் நடிக்கிறார். முன்னதாக இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ (Thalaivar 171 Title Promo) வரும் 22ம் தேதி வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். இந்த ப்ரோமோவுக்கான படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளது.

Thalaivar 171 Title Promo :

இந்நிலையில் அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தலைவர் 171 படத்தின் டைட்டில் ப்ரோமோவை பார்த்ததாகவும், ப்ரோமோ மிரட்டலாக இருப்பதாகவும், இந்த ப்ரோமோவை தொடர்ந்து தலைவர் 171 படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் தனது பேட்டியில் கூறியுள்ளார். தற்போது தலைவர் 171 படத்தின் டைட்டில் ப்ரோமோ (Thalaivar 171 Title Promo) தயாராகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் டைட்டில் ப்ரோமோ வெளியாகும் சூழலில் இந்த படத்திற்கு “கழுகு” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Latest Slideshows

Leave a Reply