Thalaivar 171 Villain : தலைவர் 171 படத்திற்கான வில்லனை தேர்வு செய்யும் லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்கு பிறகு ஓய்வு எடுக்காமல் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தின் வேலைகளை லோகேஷ் தொடங்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மலையாள நடிகர் (Thalaivar 171 Villain) ஒருவரும் அணுகியுள்ளாராம்.

தலைவர் 170 & 171 :

இயக்குனர் லோகேஷ் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், இப்போது லியோ என அனைத்து படங்களிலும் வெற்றி கண்டுள்ளார். அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளார் லோகேஷ். ஜெயிலர் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் – லோகேஷ் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியானது. லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கூறியது போல், சூப்பர் ஸ்டாரின் வேலையைத் தொடங்கியுள்ளார். தலைவர் 171 படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தில் யார் நடிப்பார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. தலைவர் 171 படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார்.மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். இந்த படத்தின் பூஜை பணிகள் தொடங்கி படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த தலைவர் 170 படத்தில் மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லியோவில் தளபதி விஜயை வேறு லெவலில் காட்டியிருக்கிறார் லோகேஷ். லியோவுக்கு கிடைத்த வரவேற்பால் லோகேஷ் இயக்கும் அடுத்த படங்கள் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். லோகேஷின் ரோலக்ஸ் கேரக்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதால் அந்த படம் குறித்தும், தலைவரின் 171வது படம் குறித்தும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி வலம்வந்து கொண்டிருக்கிறது.

Thalaivar 171 Villain :

Thalaivar 171 Villain : இந்நிலையில் தலைவர் 171ல் ஃபகத் பாசில் வில்லனாக நடிப்பார் (Thalaivar 171 Villain) என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் ஃபகத் பாசில் ஏற்கனவே விக்ரம் படத்தில் நடித்திருப்பதால் தமிழில் தொடர்ந்து வில்லனாக நடித்து வருவதால் ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும் என்று முடிவெடுத்த லோகேஷ் கனகராஜ், வேற நடிகரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். அதன்படி லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படத்தின் வில்லன் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மலையாள நடிகரை அணுகியுள்ளார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இந்த நடிகர் தற்போது சலார் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். தமிழ் மொழி, நிலைத்தாலே இனிக்கும் ராவணன் போன்ற படங்களில் நடித்த நடிகர் பிருதிவிராஜ் ரஜினிக்கு வில்லனாக நடிக்க, லோகேஷ் கனகராஜ் அணுகியிருக்கிறாராம். அதற்கு அவர் ஓகே சொன்னாரா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், இந்தப் படத்தில் நடித்தால் தமிழ் சினிமாவில் ஃபகத் ஃபாசில் (Thalaivar 171 Villain) பெற்ற புகழ் அவருக்குக் கிடைக்கும் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply