Thalaivar 171 : ரஜினிக்கு அடுத்த படத்தில் 250 கோடி சம்பளமா?
ஜெய்லர் படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கான (Thalaivar 171) எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இதனால் தனது சம்பளத்தை 250 கோடியாக உயர்த்தி உள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்லர் :
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு வாரத்திலேயே 525 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது. 500 கோடிக்கு மேல் இதுவரை வசூல் செய்தது தமிழ் சினிமாவை பொறுத்தவரை இரண்டு திரைப்படங்கள் மட்டும் தான். முதலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதன்பிறகு 500 கோடி வசூல் செய்யும் இரண்டாவது திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் முன்னர் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் எதிர்மறை விமர்சனம் பெற்று தோல்வி அடைந்தது. இதன்பிறகு பெரிதும் ஜெயிலர் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பு அனைத்தையும் பூர்த்தி செய்து ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக இந்த ஜெயிலர் திரைப்படம் ஓடியது.
தலைவர் 170 :
இதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்குகிறார். ஜெயிலர் திரைப்படத்தைப் போன்று இந்த திரைப்படமும் பெரிய ஹிட் ஆக வேண்டும் என்று ரஜினிகாந்த் கவனமாக உள்ளார். இந்த திரைப்படத்திற்காக மீசை தாடி எல்லாம் ட்ரிம் செய்து அட்டகாசமான லுக்கில் மாறியுள்ளார் ரஜினிகாந்த். இந்த திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கலாநிதி மாறன் பரிசு :
ஜெய்லர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்திருந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கும் புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
Thalaivar 171 :
அண்ணாத்த திரைப்படத்தின் தோல்வி காரணமாக ரஜினி அவர்களுக்கு சன் பிக்சர் நிறுவனம் சம்பளத்தை ஜெயிலர் படத்தில் குறைத்துக் கொடுத்தது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள (Thalaivar 171) திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் 250 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதனால் அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Latest Slideshows
-
Access Land Details In Without Documents : இனி எந்த ஆவணம் இல்லாமல் நிலத்தின் விவரம் அறிய புதிய திட்டம் அறிமுகம்
-
Health Benefits Of Eating Rose Petals : ரோஜாப்பூவின் மருத்துவ நன்மைகள்
-
Ku.Azhagirisaami Kadhaigal : கு.அழகிரிசாமி கதைகள்
-
Future Plans Of Namma Family Group : நம்ம பேமிலி Group-ன் நேற்றும், இன்றும், நாளையும் தொடரும் வெற்றிப் பயணம்
-
Indian Under 19 Team Captain Ayush Mathre : இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டுள்ளார்
-
Butterfly Life Cycle : பட்டாம்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய தகவல்கள்
-
Realme GT 7T Smartphone Launch On May 27 : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7T ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்கிறது
-
First Hindu Women AC Of Balochistan : பலுசிஸ்தானின் முதல் இந்து பெண் உதவி ஆணையராக காஷிஷ் சவுத்ரி பதவியேற்பு
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு