Thalaivar 172 : மாரி செல்வராஜுடன் இணையும் ரஜினி

Thalaivar 172 :

ரஜினி தற்போது ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகியுள்ளது. இதன் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். விஜய்யை தொடர்ந்து ரஜினியை அவர் இயக்கவுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் புதிய படம் (Thalaivar 172) குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் கடைசியாக நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து த.செ.ஞானவேலுடன் கூட்டணி அமைத்துள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்திலும் ரஜினி நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போதைய பரபரப்பான இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘லியோ’.

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு, விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்தனர், இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சக்க போடு போட்டது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக (Thalaivar 172) செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் சமூக உணர்வுள்ள படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அத்துடன் ‘வாழை’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரஜினியின் ‘Thalaivar 172’ படத்தை இயக்கும் வாய்ப்பு மாரி செல்வராஜுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் சார்பில் லலித்குமார் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமூகப் பின்னணி கொண்ட படங்களை இயக்கி வரும் மாரி செல்வராஜுடன் ரஜினி இணைந்துள்ளார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply