Thalapathi 68 Official Update: தளபதி 68 படத்தை இயக்கம் வெங்கட் பிரபு

தளபதி 68 படத்தை இயக்கும் அடுத்த இயக்குனர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம். நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள 68வது படமான தளபதி68 திரைப்படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, லியோ படக்குழு அடுத்ததாக ஹைதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக செல்லவுள்ளது.

Thalapathi 68 Official Update

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தை இயக்கப் போகும் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் குறித்த அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ஏற்கனவே பரவிய தகவலின்படி தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தளபதி 68 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தளபதி 68 படத்தின் மூலம் இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக நடிகர் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அதே நேரத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இரண்டாவது முறையாக இசையமைக்கவுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்யின் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Latest Slideshows

Leave a Reply