Thalapathy 68 Movie Poojai Video : தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

Thalapathy 68 Movie Poojai Video :

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு (Thalapathy 68 Movie Poojai Video) வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லியோ ஆகும். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வாசுதேவ் மேனன், த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம், அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

அக்டோபர் 19 ஆம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான லியோ,  மாபெரும் சாதனையை படைத்து வருகிறது. அதற்குள் லியோ திரைப்படம் இவ்வளவு வேகமாக இண்டஸ்ட்ரி ஹிட் ஆகிவிட்டதா? என விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். இந்த ஆண்டு வெளியான வாரிசு, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் ரூ.300 கோடியைத் தாண்டிய நிலையில், அந்தப் படங்களின் வாழ்நாள் சாதனையை 4 நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடித்தது. இப்படம் ரிலீஸுக்கு முன்பே டிக்கெட் விற்பனையில் 46.36 கோடிகளை வசூலித்து ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்தது. ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் ரூ.44.5 கோடி வசூலித்துள்ளது. லியோ திரைப்படம் ரூ.148.5 கோடி வசூல் செய்து, இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை லியோ படைத்துள்ளது.

இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படமான ‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ வெளியாகி (Thalapathy 68 Movie Poojai Video) நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜயின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார். இதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் முதலில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நட்பைப் பற்றிய இந்தப் பாடலில் விஜய் , பிரபுதேவா , பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் . ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்கும் இப்பாடல் படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Thalapathy 68 Movie Poojai Video : இந்நிலையில் இன்று (அக்டோபர் 24) படத்தின் பூஜை தொடர்பான வீடியோ ஒன்றை படக்குழுவினர் (Thalapathy 68 Movie Poojai Video) வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது.

Latest Slideshows

Leave a Reply