Thalapathy 68 Movie Poojai : சென்னையில் நடைபெற்ற தளபதி 68 பட பூஜை

Thalapathy 68 Movie Poojai :

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் புரமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் பூஜை (Thalapathy 68 Movie Poojai) இன்று நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் பிரமாண்ட பாடல் காட்சியுடன் தொடங்க உள்ளது. பிரபல நடன மாஸ்டர் ராஜு சுந்தரம் இந்த பாடலுக்கு நடனம் அமைக்க உள்ளார்.

விஜய்யின் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். மாஸ்டருக்குப் பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி இணைகிறது. முன்னதாக ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ், முதல் படம் போல் இல்லாமல் லியோ படம் தனது 100 சதவீதம் ஸ்டைலில் வெளியாகும் என்று கூறியிருந்தார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் கமிட்டாகியுள்ளார். சில மாதங்களுக்கு முன் படத்தின் அறிவிப்பு வெளியானபோது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் வெங்கட் பிரபு ஈடுபட்டிருந்தார். இந்த படம் குறுகிய கால தயாரிப்பாக உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் அப்பா மற்றும் மகன் என இரு கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில், விஜய்க்கு சில வாரங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்சில் அவருக்கு லுக் டெஸ்ட்ன் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று (02-10-2023) சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். லியோவைப் போலவே இந்தப் படத்திலும் படக்குழுவினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. லியோ படம் வெளியான பிறகு இந்த பூஜை (Thalapathy 68 Movie Poojai) போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரி முக்கிய கேரக்டரில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் மைக் மோகன் படத்தில் இணைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையில் நாளை தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 16ம் தேதி வரை நடைபெறும் என்றும் அதன் பிறகு அடுத்த ஷெட்யூல் வெளிநாட்டில் நடைபெறும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.

Thalapathy 68 Movie Poojai : தளபதி 68 படத்தின் பூஜை படக்குழுவினரை வைத்து எளிமையாக நடத்தப்பட்டாலும், அதன் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இப்படத்தில் சினேகா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக கூறப்பட்டது. விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply