Thalapathy 68 Title CSK: தளபதி 68 படத்திற்கு 'CSK' என டைட்டில் வைக்கப்படுமா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. லியோ படப்பிடிப்பிற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் விஜய்யும் வெங்கட் பிரபுவும் இணைந்து மாஸ்ஸான டைட்டில் ஒன்றை தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதல்முறையாக நடிக்கவுள்ளார். இது விஜய்யின் 68வது படமாக உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும்
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோர் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. அதேநேரம், இந்த மாதம் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 68 படத்திற்கு பூஜை போடா உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியிடுவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபுவின் படத்திற்கான டைட்டில் எப்போதுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும்.
அதன்படி, தளபதி 68 படத்தின் டைட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷார்ட் வெர்ஷனான ‘CSK’ தான் தளபதி 68 படத்தின் டைட்டில் என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் முக்கிய அடையாளமாக ‘CSK’ பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் அணியான ‘CSK’ வை தங்களது பெருமையாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் தளபதி 68 படத்திற்கு ‘CSK’ என டைட்டில் வைக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளார். விஜய்யும் தல தோனியும் ஏற்கனவே நல்ல நண்பர்களாக உள்ளனர். விரைவில் தோனி தயாரிக்கும் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், வெங்கட் பிரபு மற்றும் தல தோனி இருவரும் ‘CSK’ அணிகளின் தீவிர ரசிகர்கள். இதனால் தளபதி 68 படத்திற்கு ‘CSK’ என பெயரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் இதன் பின்னணி தெரியவரும். .