Thalapathy 68 Updates : விஜய்யுடன் இணைந்த பிரபலங்கள்...

Thalapathy 68 Updates :

விஜய் நடித்துள்ள லியோ படம் இம்மாதம் 19ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. லியோ ரிலீஸுக்கு முன்பே விஜய் தனது 68வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை இன்று நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 68ல் விஜய்யுடன் மெகா கூட்டணி பற்றிய தகவல் (Thalapathy 68 Updates) வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் லியோ. விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு முன் விஜய் தனது 68வது படத்தில் பிஸியாகி விட்டார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து, வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்திற்கு தற்போது ‘தளபதி 68’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் தளபதி 68 படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரிலீஸுக்கு ப்ரீ ரிலீஸ் மாஸ் காட்டியது. தளபதி 68 படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கிறார். இதற்காக மேக்கப் மற்றும் பாடி ஸ்கேனிங் டெஸ்ட் எடுப்பதற்காக விஜய் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து திரும்பினார்.

இதற்கிடையில் தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நட்சத்திர கூட்டணி பற்றி தகவல்கள் (Thalapathy 68 Updates) வெளியாகி உள்ளன. அதன்படி அரவிந்த் சாமி, பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் வெள்ளிவிழா நாயகன் மைக் மோகனும் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 90-களில் பல சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்த மோகன், தளபதி 68ல் வில்லனாக நடிப்பதாக தெரிகிறது. அதேபோல் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரி இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் இதற்கு முன் தமிழில் கோலா படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தளபதி 68-ல் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா சவுத்ரிக்கு பதிலாக அவர் நடிக்கிறாரா அல்லது அவரும் படத்தில் கதாநாயகியாக என்பது குறித்து படக்குழு சார்பில் விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தளபதி 68ல் சினேகா, வைபவ், மீனாட்சி செளத்ரி, ஜெய், அபர்ணாதாஸ் ஆகியோர் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Thalapathy 68 Updates : தளபதி 68 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையிலும், அதன் பிறகு வெளிநாடுகளிலும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தளபதி 68 இரண்டு அல்லது மூன்று ஷெட்யூல்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு 2024 சம்மர் அல்லது தீபாவளியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதேபோல் தளபதி 68 படத்தின் டைட்டில் அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply