Thalapathy 68 VFX : தளபதி 68 VFX பணிக்காக அமெரிக்கா சென்ற விஜய் மற்றும் வெங்கட் பிரபு

Thalapathy 68 VFX :

தளபதி 68 படத்தின் VFX வேலைகளுக்காக நடிகர் விஜய்யுடன் அமெரிக்கா சென்றுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை (Thalapathy 68 VFX) ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்த விஜய் தனது அடுத்த படமான தளபதி 68 படத்தில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். தளபதி 68 படத்தை தயாரிப்பு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. லியோ திரைப்படம் வெளியாகும் வரை தளபதி 68 பற்றி படக்குழு எந்த அப்டேட்களையும் வெளியிடவில்லை என்றாலும் அவ்வப்போது அப்டேட்கள் கசிந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா அல்லது சிம்ரனும் மற்றொரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி நடிகர்கள் ஜெய், பிரபுதேவா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் கதை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் இயக்குனர் வெங்கட் பிரபுதான். தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதால், புதிய தொழில்நுட்பத்தில் இளமையான கதாபாத்திரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக விஜய்யை அமெரிக்கா அழைத்து சென்ற வெங்கட் பிரபு, அங்குள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து (Thalapathy 68 VFX) பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த தொழில்நுட்பம் இதற்கு முன் ஷாருக்கானின் ஃபேன் படத்தில் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் சமீபத்தில் இயக்குனர் ஷங்கரும் இந்த தொழில்நுட்பத்தை இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தினார்.

Thalapathy 68 VFX : இதற்காக அங்குள்ள ஸ்டுடியோவில் நடிகர் விஜய் முழுவதுமாக ஸ்கேன் செய்யப்பட்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தையும், நடிகர் விஜய் ஸ்டுடியோவை சுற்றிப்பார்த்தபோது எடுத்த புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, எதிர்காலத்திற்கு அவரை வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தளபதி 68 டைம் டிராவல் அடிப்படையில் உருவாகும் என வெங்கட் பிரபு சூசகமாக கூறியுள்ளதாக தெரிகிறது.

Latest Slideshows

Leave a Reply