Thalapathy 68 : ஹாலிவுட் தரத்தில் ரெடியாக உள்ள தளபதி 68

தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ள நிலையில் தளபதி விஜய் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பிற்கு (Thalapathy 68) ரெடி ஆகிவிட்டார். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி உடன் விஜய் கம்பேர் செய்யப்பட்டு அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ யார்? என போட்டி இப்போதிலிருந்தே சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் நெல்சன் இயக்கத்தில் தற்போது ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ரிலீசாகி உலகம் முழுவதிலும் 500 கோடிக்கும் அதிகமான வசூல் செய்து மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ஜெயிலர் கலெக்க்ஷனை, லியோ அடித்து விடும் என்று சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி ரிலீஸ் ஆக தயாராக உள்ளது.

Thalapathy 68

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகின. மேலும் விஜயின் ‘புதிய கீதை’ படத்திற்கு பிறகு, மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதால் (Thalapathy 68) ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இதற்கு முன்னதாக அமெரிக்காவிற்கு சென்று உள்ள இந்த குழு விஜயை ஹாலிவுட் ஹீரோ லுக்கில் திரையில் காட்ட தீவிரமாக வேலை செய்து வருகிறது. 

மேலும் விஜய் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள படமாக ‘லியோ’ தயாராகி உள்ளது. ஏனெனில் அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து ‘விக்ரம் ‘ என்னும் தரமான திரைப்படத்தை தந்துள்ளார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், இதனை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் (Thalapathy 68) காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் சினிமா விமர்சகர்கள் ஏற்கனவே லியோ 1000 கோடி வசூல் செய்யும் என்று சொல்லி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி 68 திரைப்படத்தின் பூஜை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும், அக்டோபர் மாதத்தில் இருந்து விஜய் படப்பிடிப்பிற்கு செல்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் இந்த திரைப்படத்தில் இரண்டு முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. படத்திற்கான வேலை அமெரிக்காவின் தலைநகரான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்துவிட்டன. இந்தப் பல்கலைக்கழகத்தில் தற்போது வரை 50-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் எந்த இந்திய படங்களுக்கும் இந்த மாதிரியான டெக்னாலஜி பயன்படுத்தவில்லை என்று சொல்லப்பட்டு வருகிறது.

Latest Slideshows

Leave a Reply