Thalapathy 69 Update : தளபதி 69 படத்தை இயக்கப்போவதை உறுதி செய்த H.வினோத்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் H.வினோத். சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் தற்போது தளபதி 69 படத்தை இயக்கப்போவதை (Thalapathy 69 Update) உறுதி செய்துள்ளார்.

தளபதி 69 :

தளபதி விஜய் தனது 69வது படத்தை முடித்த பிறகு, தனது அரசியல் வாழ்க்கைக்காக படங்களில் இருந்து நீண்ட இடைவெளி எடுக்க உள்ளார். தளபதி 69 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்காக விஜய் திறமையான திரைப்பட இயக்குநர் ஹெச் வினோத்துடன் கைகோர்க்கிறார் (Thalapathy 69 Update) என்பது முன்னதாகவே கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. இந்த திட்டம் குறித்த செய்திகள் சில காலமாக வெளிவந்து கொண்டிருந்தாலும், தயாரிப்பாளர்கள் இதை பற்றி வாய் திறக்காமல் இருந்தனர். இருப்பினும், இயக்குநர் ஹெச்.வினோத், தளபதி 69 படத்திற்காக விஜய்யுடன் ஒத்துழைப்பதை சமீபத்திய நிகழ்வில் உறுதிப்படுத்தினார்.

Thalapathy 69 Update - விஜய்யுடன் ஜோடி சேரும் H.வினோத் :

தி கோட் படம் வெளியான பிறகு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தளபதி 69 படம் தொடர்பான பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தளபதி 69 படத்தில் நடிகை சமந்தாவும், விஜய்யுடன் இணைந்து மோகன்லால் அல்லது கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் (Thalapathy 69 Update) தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி இந்த படம் அரசியல் களத்தில் இல்லாமல் கமர்சியல் கதைக்களத்தில் உருவாகிறது என்ற செய்தியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த மகுடம் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட H.வினோத் தளபதி 69 படத்தை பற்றி பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்க போகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தளபதி 69 வது படம் மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 69 திரைப்படம் அக்டோபர் 2024 இல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. சமந்தா மற்றும் பிரேமலு நடிகை மமிதா பைஜு ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இசைமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பெயரிடப்படாத விஜய் நடிக்கும் இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Latest Slideshows

Leave a Reply