Thalapathy 69 படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் இயக்குவேன் | கௌதம் மேனன் அறிவிப்பு

நடிகர் விஜய்யின் 69 படத்தை அதாவது விஜய் நடிக்கும் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் இயக்குவேன் என்று இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் “ஜோஷ்வா இமை போல் காக்க” இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் அவரது சகோதரியின் மகன், வருண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கௌதம் மேனன் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நடிகர் வருண் ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக பார்க்கப்படுகிறார்.

ஆனால் இந்தப் படத்துக்காக அவர் ஆற்றிய பணியைப் பாராட்டினார். இப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவும் இணைந்துள்ளார். இதற்கு முன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸ் ஆனது. கேங்ஸ்டர் படமாக உருவான இப்படம் சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் பல வருடங்களாக வெளிவராமல் இருந்த துருவ நட்சத்திரம் படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல பிரச்சனைகளால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா படம் வெளியாக உள்ளது.

Thalapathy 69 படம் குறித்து கௌதம் மேனன் :

ஜோஷ்வா படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் இயக்குனர் கௌதம் மேனனிடம் பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை கேட்டனர். விஜய்யின் Thalapathy 69 படம் குறித்தும் ஒரு கேள்வி எழுந்தது. Thalapathy 69 படத்தில் வாய்ப்பு கிடைத்தால் செய்வீர்களா என்று கேட்டதற்கு, கண்டிப்பாக செய்வேன், ஏன் செய்ய மாட்டேன் என்று பதிலளித்தார் கௌதம் மேனன். விஜய் தற்போது ‘The Greatest Of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து Thalapathy 69 படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு நடிப்பிலிருந்து வெளிவந்து முழுக்க முழுக்க தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

இதனால் Thalapathy 69 படத்தின் இயக்குனர் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி தயாரிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் முதல் திரிவிக்ரம் வரை இயக்குவதாக அடுத்தடுத்து தினந்தோறும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. கௌதம் மேனனுடன் விஜய் ஆக்‌ஷன் படமோ அல்லது காதல் படமோ நடித்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். Thalapathy 69 படம் குறித்த அப்டேட் மார்ச் அல்லது ஏப்ரலில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply