Thalapathy Vijay 69 First Look : விஜயின் கடைசி பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது கடைசி படமான 69 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை அதாவது ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை (Thalapathy Vijay 69 First Look) முன்னிட்டு வெளியாகும் என கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தற்போது புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அவரது தமிழக வெற்றிக் கழகம் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறது. நடிகர் விஜய் தற்போது முழு அரசியல்வாதியாகவே மாறியுள்ளார். கட்சிப் பணிகளைச் செய்து, மக்களைச் சந்தித்து, ஆளுங்கட்சியை விமர்சித்து வருகிறார். அரசியலுக்கு வந்த பிறகு விஜய் தனது திரையுலக (Thalapathy Vijay 69 First Look) வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார். தற்போது அவர் தனது கடைசி படமான தளபதி 69 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

தளபதி 69

Thalapathy Vijay 69 First Look - Platform Tamil

கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எச் வினோத், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு போன்ற கமர்சியல் கதைக்களங்களை வைத்து வெற்றியை கொடுத்துள்ளார். தளபதி 69 படத்தின் கதையும் விஜயின் அரசியல் வருகைக்கு ஏற்றார் போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 69 படம் தெலுங்கில் (Thalapathy Vijay 69 First Look) பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

தளபதி 69 படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பது தான் தற்போது அனைத்து விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தின் தலைப்பை தளபதி 69 படத்திற்கு டைட்டிலாக இருக்கும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய். தற்போது அவர் சினிமாவை விட்டு விலகும் நிலையில், அவரது முதல் படத்தின் டைட்டிலை வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் (Thalapathy Vijay 69 First Look)

இந்நிலையில், தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகும் (Thalapathy Vijay 69 First Look) என KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது X பக்கத்தில் ஒரு சிறிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் நடித்த அனைத்து படங்களின் டைட்டில்களையும் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும் படத்தின் தலைப்பு நாளைய தீர்ப்பு என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply