Thangalaan First Single : தங்கலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் முதலில் ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தாமதமானது. இந்தப் படம் விக்ரமுக்கு நிச்சயம் மெகா ஹிட்டாக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆகஸ்ட் 15 ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் (Thangalaan First Single) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தங்கலான் :

பா.ரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். இது அவர் இயக்கிய படங்களில் மிக மோசமான விமர்சனம் பெற்ற படமாக அமைந்தது. மெட்ராஸ், அட்டகத்தி போன்ற அற்புதமான கதைகளை எழுதிய ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது போன்ற கதையை எழுதியிருக்கவே கூடாது. இப்படிப்பட்ட சூழலில் தனது அடுத்த படமாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்க கமிட்டானார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். எப்போதும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுக்கும் விக்ரம் பா.ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தங்கலான் படத்தின் வெளியான மேக்கிங் வீடியோ மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும் என்ற குறிப்பை நமக்கு அளித்தது. அதை பார்த்த ரசிகர்கள், விக்ரம் சும்மாவே உழைப்பார். இப்போது பா.ரஞ்சித்தோடு இணைந்துள்ளார். சொல்லவா வேண்டும். படம் நிச்சயம் மெகா ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முதலில் இப்படம் ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்துள்ளது. இதையடுத்து, படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி, இப்படம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thangalaan First Single :

இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று மாலை முதல் பாடல் (Thangalaan First Single) வெளியிடப்பட்டது. ‘மினுக்கி மினுக்கி’ என்று தொடங்கும் இப்பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை உமாதேவி எழுத, சிந்தூரி விஷால் பாடலை பாடியுள்ளார். சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply