Thangalaan Movie Release Date : தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியுடன் இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு

Thangalaan Movie Release Date :

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியுடன், டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி (Thangalaan Movie Release Date) கொடுத்துள்ளது படக்குழு. விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தங்கலான். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் வெளியீட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக (Thangalaan Movie Release Date) அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற விக்ரம், அடுத்த படத்தில் நடிக்கிறார். பா.ரஞ்சித்துடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள விக்ரம், அவரது இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் தனக்கே உரிய அடையாள அரசியலை பேசும் பா.ரஞ்சித்தும், நடிப்பில் வெரைட்டியாக மிரட்டும் விக்ரமும் இணைந்துள்ளனர். இந்த கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம், கேஜிஎஃப் எனப்படும் கோலார் சுரங்கத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.

பீரியட் ஜானரில் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள தங்கலானில் விக்ரமின் நடிப்பு மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக (Thangalaan Movie Release Date) அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படம் 2024 ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது. பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் அதிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினியின் லால் சலாம் ஆகிய இரண்டு படமும் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என்பதால் ஜனவரி 26ஆம் தேதி வெளியிட (Thangalaan Movie Release Date) தங்கலான் படக்குழு முடிவு செய்துள்ளது.

அதேபோல் தங்கலான் டீசர் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்கலான் படத்தின் டீசர் வரும் நவம்பர் 1ம் தேதி வெளியாகும் என நடிகர் விக்ரம் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மிரட்டல் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு வைபை கொடுத்துள்ளார். போஸ்டரிலேயே தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கலான் படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.  விக்ரம், பா.ரஞ்சித், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள (Thangalaan Movie Release Date) நிலையில், ரசிகர்கள் இந்த போஸ்டரை இணையத்தில் வைரலாகி டீசருக்காக காத்திருக்கின்றனர். மேலும் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply